தேசிய விருது இயக்குனர் படத்தில் 4 முறையாக நடிக்கும் அஞ்சலி.. எதிர்பார்ப்பை கிளப்பிய படம்

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களுக்கு பெயர் பெற்றவை இயக்குனர் ராம். இதுவரை இவர் இயக்கிய படங்கள் அனைத்துமே நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளன. அதேபோல் இவர் இயக்கிய தங்கமீன்கள் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் ராம், உலக மயமாக்கலை கற்றது தமிழ் படம் மூலமும், தந்தை – மகள் பாசத்தை தங்க மீன்கள் படம் மூலமும், நவீன காலத்து காதலை தரமணி படத்தின் மூலமும், தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமி குறித்து பேரன்பு படம் மூலமும் பேசியிருந்தார்.

இவரது படங்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு இருக்கும். அந்த வகையில் இவரது அடுத்த படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் இயக்குநர் ராமின் அடுத்தப் படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் ராமின் அடுத்தப் படத்தில் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்க, நடிகர் சூரி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

மாநாடு படத்தை தயாரித்து வரும் சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரிக்க உள்ளார். கற்றது தமிழ், தரமணி, பேரன்பு ஆகிய படங்களுக்கு பின்னர் நான்காவது முறையாக நடிகை அஞ்சலி மீண்டும் இயக்குனர் ராம் படத்தில் இணைந்துள்ளார். நடிகை அஞ்சலி கற்றது தமிழ் படம் மூலமாகவே தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -