புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

கோடிகளை வாரி இறைத்தும் சிக்காத சில்வண்டு.. பெரிய கும்பிடு போட்டு தலைதெறிக்க ஓடிய அனிருத்

இளம் வயதிலேயே இசைத்துறையில் சாதித்த பெருமை அனிருத்துக்கு உண்டு. முதல் படத்திலேயே அட யாருப்பா இந்த பையன் என்று அனைவரையும் வியக்க வைத்த இவர் இப்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இசையமைப்பாளராக வளர்ந்து நிற்கிறார்.

டாப் ஹீரோக்களின் கால்ஷூட் கூட கிடைத்து விடும், ஆனால் இவரின் கால்ஷூட்டை பெறுவதற்கு இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தவம் கிடக்க வேண்டி இருக்கிறது. அந்த அளவிற்கு அடுத்த ஐந்து வருடங்களுக்கு அனிருத்தின் கால்ஷூட் நிரம்பி வழிகிறது. அதனாலேயே அவர் இப்போது எந்த புது படத்திலும் கமிட்டாக மறுக்கிறாராம்.

Also read: தனுஷ் கொடுக்க போகும் இன்ப அதிர்ச்சி.. பல கலவரங்களுக்கு பிறகு வந்த குட் நியூஸ்

இப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படியோ பல போராட்டங்களுக்குப் பிறகு ஏகே 62 படத்திற்கு அனிருத்தை கமிட் செய்திருக்கின்றனர். அதைத்தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் படத்திற்கும் இவரிடம் தேதி கேட்டிருக்கின்றனர். ஆனால் அவர் முடியவே முடியாது என்று மறுத்து விட்டாராம்.

இத்தனைக்கும் சிவகார்த்திகேயனுடன் இவருக்கு ஒரு நல்ல நட்பு இருப்பது அனைவருக்கும் தெரியும். அப்படி இருந்தும் கூட அவர் முடியாது என்று மறுத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் இன்னும் பல முன்னணி இயக்குனர்களும் இவரிடம் கால்ஷூட் கேட்டிருக்கின்றனர். ஆனால் கோடி ரூபாய் கொடுத்தாலும் என்னிடம் இப்போது தேதி கிடையாது என்று பெரிய கும்பிடாக போடுகிறாராம்.

Also read: தனுஷ்- அனிருத் இடையில் அதிகரித்த விரிசல்.. பல கோடியை விட்டு எறிந்த சம்பவம்

அந்த அளவிற்கு தம்பி நிற்க கூட நேரம் இல்லாமல் படு பிஸியாக இருக்கிறார். இதைப் பற்றி தான் தற்போது திரையுலகில் கிசுகிசுத்து வருகின்றனர். அந்த வகையில் அனிருத் தற்போது சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர், விஜய்யின் லியோ, கமலின் இந்தியன் 2 போன்ற படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்திற்கும் இவர் இசையமைக்கிறார். இப்படி முன்னணி ஹீரோக்களின் முதல் சாய்ஸாக இருக்கும் இவர் பல இசை ஜாம்பவான்களையும் ஓரங்கட்டி தற்போது முன்னேறி இருக்கிறார். ஏற்கனவே இவர் ஏ ஆர் ரகுமானை பின்னுக்கு தள்ளி விட்டதாக ஒரு பேச்சு இருக்கிறது. அதை உண்மையாகும் வகையில் அனிருத் தற்போது டாப் கியரில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

Also read: தேடிப் போய் வாய்ப்பு கேட்ட மீனா.. செட்டாகாது என ரிஜெக்ட் செய்த ரஜினி

- Advertisement -

Trending News