தேரை இழுத்து தெருவில் விட்ட அட்லீ.. அக்கடதேசம் கூட்டிட்டு போய் அசிங்கப்படும் அனிருத்

Atlee and Aniruth: நடிகர்களுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறதோ, அதற்கு இணையாக தற்போது இசையமைப்பாளராக அனிருத்-க்கும் மவுசு உயர்ந்து விட்டது. அதாவது படங்கள் வெளிவருவதற்கு முன் அனைவரும் இவருடைய பாட்டுக்கு அடிமையாகிடுவோம். அந்த அளவிற்கு மிகப்பெரிய வைப்ரேட் கொடுக்கிறது இவருடைய இசை.

அத்துடன் அனிருத் மியூசிக் அமைத்தால் அந்த படம் சாதாரண ஹிட் ஆக இல்லாமல் மிகப்பெரிய உலக ஹிட் ஆக மாறிவிடுகிறது. இதை தொடர்ந்து நிறைய படங்களில் பார்த்திருப்போம். தற்போது ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய அளவில் கோலாகலமாக கொண்டாடுவதற்கு முக்கிய காரணம் அனிருத்தின் பாடல்கள் தான் என்று சொல்லலாம்.

Also read: 2வது முறையும் அவருடன் பாடும் வாய்ப்பை இழந்த ரஜினிகாந்த்.. ஒத்திகை பார்க்கும் பொழுது ஏற்பட்ட சங்கடம்

அப்படிப்பட்ட இவர் தான் தற்போது ட்ரெண்டிங்கில் ராக் ஸ்டார் ஆக இருக்கிறார். அதனால் இவரை எப்படியாவது நம்முடைய படத்தில் மியூசிக் டைரக்டராக கமிட் பண்ணி விட வேண்டும் என்று பலரும் போட்டி போட்டுக் கொண்டு வரிசையில் நிற்கிறார்கள். அந்த வகையில் இவருக்கு அதிக சம்பளத்தை கொடுத்து ஹிந்தியில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்திற்கு வலுக்கட்டாயமாக அனிருத்தை அட்லீ கூட்டிட்டு போனார்.

உடனே அனிருத்தும் நம்மளுக்கு இவ்வளவு மவுஸ் இருக்கிறதா என்று ஓவர் அலப்பறையில் அதிகமாக பந்தா காட்டினார். ஆனால் ஜவான் படத்தின் பாடல்கள் வெளியானதில் இருந்து இப்போது வரை இந்த பாடலை தமிழ்நாட்டில் கண்டு கொள்ளவே இல்லை. ஒருவேளை நமக்கு டப்பிங் பாடல்கள் பிடிக்கவில்லையோ என்று பார்த்தால் ஹிந்திலும் அந்தப் பாடலுக்கு அதே நிலைமை தான்.

Also read: லியோவுக்கு கலாநிதி கொடுத்த கெடு.. அனிருத் ஐடியாவால் முழிக்கும் விஜய்

பாலிவுட்டில் அனிருத் இசை செல்லுபடி ஆகவில்லை, அந்த அளவிற்கு ஜவான் பாடல்கள் பெருசாக ஈடுபடவில்லை. இவரை வலுக்கட்டாயமாக கூட்டிட்டு போயி அக்கடதேசத்தில் அசிங்கப்படுத்தி விட்டார் அட்லீ. இதற்கு பேசாம எப்போதும் போல் பாலிவுட்டில் கலக்கும் ஏ ஆர் ரகுமான் வைத்தே இவருடைய காரியத்தை சாதித்து இருக்கலாம்.

கடைசியில் தேரை இழுத்து தெருவில் விட்டது போல் அட்லீயோட நிலைமை ஆகிவிட்டது. இதனால் ஒட்டு மொத்த டீமும் செம கடுப்பில் இருக்கிறார்கள். முக்கால்வாசி படங்கள் வெளி வருவதற்கு முன் பாடல்கள் மூலம் அந்த பாட்டிற்கு பெரிய எதிர்பார்ப்பு கிடைத்துவிடும். ஆனால் ஜவான் படத்தின் நிலைமையோ தலைகீழாக மாறிவிட்டது. பாட்டு எதிர்பார்த்த அளவிற்கு இல்லை, இதில் படம் எந்த அளவுக்கு இருக்கப் போகிறதோ என்று அனைவரும் கவலையில் இருக்கிறார்கள்.

Also read: ஜவானால் எகிறிய அட்லீயின் டிமாண்ட்.. ஆரம்பிக்கும் முன்பே லாக் செய்த சன் பிக்சர்ஸ், அதுக்குனு இத்தனை கோடியா.!

Sharing Is Caring:

அதிகம் படித்தவை