பீஸ்ட் பத்திலாம் கேட்க கூடாது.. கண்டிஷன் போட்ட அனிருத்! வெளுத்துவிட்ட தளபதி ரத்தங்கள்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தினை நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இப்படத்தின் சிஜி காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் அனிருத் நேரலையில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தொடர்ந்து பதில் அளித்து வந்தார். முதலில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தில் மாஸ்டர் படம் போல் இங்கிலீஷ் பாடல் உள்ளதா என கேட்டுள்ளார். அதற்கு அனிருத் டாக்டர் படத்தில் அந்த மாதிரியான பாடல்கள் இல்லை, மாஸ்டர் படத்தில் அந்த மாதிரியான சுச்சுவேஷன் அமைந்ததால் இங்கிலீஷ் பாடல் இடம் பெற்றதாக கூறி உள்ளார்.

முதலில் சாதாரணமான கேள்விகளை கேட்டு வந்த ரசிகர்கள். அதன்பிறகு சாதுரிய தனமான கேள்வி கேட்க ஆரம்பித்தனர். அதுவும் விஜய் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா கோடிக்கணக்கில் செலவு செய்து உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் அப்டேட் பற்றி கேட்டுள்ளனர். அதற்கு அனிருத் முதலில் சாதுரியமாக படத்தின் அப்டேட்டை பொறுமையாக இருங்கள் வெளியாகும் என கூறினார்.

vijay-aniruth
vijay-aniruth

ஆனால் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் அனிருத்திடம் பீஸ்ட் படத்தின் பாடல் காட்சிகள் முடிவடைந்து விட்டதா, பாடலுக்கு இசை முடிவடைந்து விட்டதா என தொடர்ந்து கேட்டு வந்தனர். கட்டுக்கடங்காமல் அப்டேட் பற்றிய கேள்விகள் அதிகமானதால் வேறுவழியின்றி அனிருத் இசையின் மூலம் ரசிகர்களை எப்படி மயக்கினாரோ அதுபோலவே பதில்கள் மூலம் ரசிகர்களை மயக்கினார்.

அதாவது ஒரு படத்தின் அப்டேட்டை ஒரு இசையமைப்பாளராக என்னால் எதுவும் கூற முடியாது. அதற்கு பல கோடி போட்டு செலவு செய்த தயாரிப்பு நிறுவனம் தான் படத்தினைப் பற்றிய தகவல்களை கூற வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும் நண்பா என அந்த ரசிகர்களுக்கு பதில் அளித்துள்ளார்.

ஆனால் ஒரு சில ரசிகர்கள் சும்மா இருப்பார்களா பீஸ்ட் படத்தில் தானே வேலை செய்றிங்க அப்புறம் எப்படி உங்களுக்கு தெரியாமல் இருக்கும் என கோபமாக லைவ் சேட்டில் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர். வேறுவழியின்றி அனிருத் ஓகே பாய் டேக் கேர் என கூறிவிட்டு சென்றார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்