விக்ரம் படத்திற்கு காப்பி அடித்து மியூஸிக் போட்ட அனிருத்.. அலசி ஆராய்ந்த நெட்டிசன்கள்!

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3-ம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆகி தாறுமாறாக வசூல் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. 120 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட விக்ரம் படம் உலக அளவில் 250 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனை புரிந்து கொண்டிருக்கிறது .

இந்த படத்தில் கமலஹாசனுடன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா, அர்ஜுன் தாஸ், காயத்,ரி காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் உடன் அனிருத் மீண்டும் விக்ரம் படத்தில் இசையமைத்திருக்கிறார்.

செம ட்ரெண்டிங்கில் இருக்கும் விக்ரம் படத்தின் பாடல் குறித்து பகீர் தகவல் தற்போது இணையத்தில் வைரலாக பரவுகிறது. அதாவது சமீபகாலமாக பல ஹாலிவுட் படங்கள் மற்றும் வெளிநாட்டு பாடல்களை இங்குள்ள இசையமைப்பாளர்கள் காப்பி அடிப்பதாக ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறது.

இதற்கான பல வீடியோவும் வரிசையாக யூட்யூபில் குவிந்து கொண்டிருக்கும் நிலையில், அந்த சர்ச்சையில் தற்போது அனிருத்-தும் சிக்கி உள்ளார். அதாவது அனிருத் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் விக்ரம் படத்தில் இடம்பெற்ற டைட்டில் பாடலை வேறொரு படத்தில் இருந்து காப்பி அடித்துள்ளார்.

அதாவது World Music – Amunet (The Hidden One) தளத்திலிருந்து அனிருத், விக்ரம் படத்தில் இடம்பெற்ற டைட்டில் பாடலை காப்பி அடித்துள்ளார். இதனை அலசி ஆராய்ந்து நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர். தற்போது இந்த செய்தி சமூக வலைத்தளங்கள் வைரலாகி வருகிறது.

‘என்கிட்ட சரக்குல இவ்வளவு தான் இருக்கு என ஒத்துகிட்டு, புது புது திறமை உள்ள இசையமைப்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாமே. அதை விட்டுவிட்டு அப்பட்டமாக காப்பியடித்து அதன்மூலம் பாடல்களை இசையமைப்பது நல்லாவா இருக்குது’ என நெட்டிசன்கள் இந்த சம்பவத்தை வைத்து கழுவி கழுவி ஊற்றுகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்