இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்த தேவி ஸ்ரீ பிரசாத்.. அனிருத்தை ஓரங்கட்டி செய்யும் தரமான வேலை

Anirudh Market Became Question mark: கடந்த வருடம் ரிலீசான பெரிய பட்ஜெட் படங்களுக்கு பெரும்பாலும் இசையமைத்தது அனிருத் தான். லியோ ஜெய்லர், ஜவான் என அடுத்தடுத்து மெகா ஹிட் படங்கள். இவர் கொடி தான் தமிழ் சினிமா வட்டாரத்தில் மேலோங்கி பறந்தது.

ஆனால் இப்பொழுது இவருடைய மார்க்கெட்டுக்கு போட்டியாக படங்களை குவித்து வருகிறார் தேவி ஸ்ரீ பிரசாத். இவருடைய மார்க்கெட்டுக்கு ரீஎண்ட்ரி கொடுத்த படம் என்றால் அது புஷ்பா படம் தான். அந்த படத்துக்கு பின்னர் இவருடைய ராஜ்ஜியம் வளரத் தொடங்கியது.

புஷ்பா படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் ரிலீசான ஐந்து மொழிகளிலும் சூப்பர் ஹிட் ஆகி பட்டையை கிளப்பியது. தமிழ். தெலுங்கு. மலையாளம். கன்னடம், ஹிந்தி என எல்லா மொழிகளிலும் ஹிட்டடித்தது இதனால் இவருடைய மார்க்கெட் ஜெட் வேகத்தில் மீண்டும் எதிரியது.

அனிருத்தை ஓரங்கட்டி செய்யும் தரமான வேலை

இப்படி ஐந்து மொழிகளிலும் ஹிட் அடித்த சாதனையை எந்த ஒரு பான் இந்தியா படமும் நிகழ்த்த வில்லை. இந்த சாதனையை செய்த முதல் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தான். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்களை இசையமைக்க உள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத்.

அஜித் நடிக்கும் குட், பேட், அக்னி அக்லி, சூர்யாவின் கங்குவா, தனுஷ் நடிக்கும் குபேரா, விஷால் நடிக்கும் ரத்னம், மற்றும் அல்லு அர்ஜுனாவின் புஷ்பாபு போன்ற வரப்போகும் எல்லா படங்களுக்குமே தேவி ஸ்ரீ பிரசாத் கமிட்டாகி உள்ளார். இதன் மூலம் அனிருத் இடத்தை இவர் பிடிக்க வாய்ப்புள்ளது.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை