Tamil Cinema News | சினிமா செய்திகள்
ராஜமௌலி படத்தில் இணைந்த அனிருத்.. போடு, வெறித்தனம்!
ராஜமௌலி இயக்கி வரும் பிரமாண்ட படத்தில் அனிருத் இணைந்துள்ள செய்தி கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனிருத்துக்கு தெலுங்கு சினிமாவிலும் நல்ல வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது சென்சேஷனல் இசையமைப்பாளராக வலம் வருகிறார் அனிருத். அடுத்ததாக அவரது இசையில் விஜய்யின் பீஸ்ட், கமலஹாசனின் விக்ரம் போன்ற படங்கள் உருவாகி வருகின்றன.
அது மட்டுமில்லாமல் இன்னும் பல படங்களிலும் பணியாற்றி வருகிறார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் அடுத்ததாக மகேஷ்பாபு படத்திற்கு இசையமைக்கப் போகிறாராம்.
இது ஒருபுறமிருக்க ராஜமவுலி படத்தில் அனிருத் இணையும் செய்தி பரவி வருகிறது. தெலுங்கில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களுக்கு பிரமோஷன் பாடல்கள் செய்வது வழக்கம். அந்த வகையில் அனிருத் இசையமைத்திருந்த கேங் லீடர் என்ற படத்திலும் ஒரு பிரமோஷனல் பாடல் இடம்பெற்றது.
அதேபோல் ராஜமௌலி 400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கி வரும் RRR படத்தின் புரமோஷன் பாடல்களை ஐந்து மொழிகளில் உருவாக திட்டமிட்டுள்ளாராம். அதில் தமிழ் வெர்ஷனில் அனிருத் பாட உள்ளதாக கூறுகின்றனர்.
RRR படத்திற்கு ராஜமவுலியின் ஆஸ்தான இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி இசையமைத்து வருகிறார். இவர்தான் பாகுபலி படங்களுக்கும் இசையமைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

anirudh-cinemapettai
