இசைப்புயலை மிஞ்சிய அனிருத்.. ஜவான் படத்துக்கு இசையமைக்க இத்தனை கோடி சம்பளமா?

Anirudh- AR Rahman: இசையமைப்பாளர் அனிருத், சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக சம்பவம் செய்து கொண்டிருக்கிறார். ஜவான் திரைப்படத்தின் ப்ரோமோ தீம், லியோ திரைப்படத்தின் நான் ரெடி தான் வரவா பாடல், ஜெயிலர் படத்தின் காவாலா மற்றும் ஹுக்கும் பாடல்கள் பயங்கரமாக ட்ரெண்டாகிக் கொண்டிருக்கின்றன. எங்கு திரும்பினாலும் அனிருத்தின் பாடல்கள் தான் ஒலிக்கின்றன.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிய அனிருத், கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை இசையுலகத்தில் அடைந்திருக்கிறார். ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களில் இவர்தான் இசையமைக்கிறார். இசையமைப்பாளர்களில் பயங்கர பிசியாக இருப்பது இப்போது அனிருத் தான்.

Also Read:எடுபடாமல் போன லியோ, பவரை காண்பித்த ஜெயிலர்.. அனிருத் பக்கம் திரும்பிய கத்தி

இயக்குனர் அட்லி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த ஜவான் திரைப்படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்திருந்தார். சமீபத்தில் இந்த படத்தில் நடித்த நட்சத்திரங்களின் சம்பள விவரங்கள் வெளியாகி இருந்தது. அதோடு தற்போது அனிருத்தின் சம்பள விவரமும் வெளியாகி அனைவரையும் வாயடைக்க செய்திருக்கிறது.

அனிருத் இந்த படத்திற்காக 10 கோடி சம்பளமாக பெற்றிருக்கிறார். தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர்களில் ஏ ஆர் ரகுமானுக்கு தான் அதிக சம்பளம் என்று அனைவருக்கும் தெரியும். அவருடைய சம்பளமே 8 கோடி தான். அப்படி இருக்கும் பொழுது அனிருத் தற்போது சம்பள விஷயத்தில் இசை புயலை மிஞ்சி இருக்கிறார். இந்த விஷயம் தான் தற்போது பயங்கர வைரலாகி கொண்டு இருக்கிறது.

Also Read:நயன்தாராவுக்கு போட்டியாக பாலிவுட்டில் இறங்கும் ஹீரோயின்.. பெட்டிகளை இறக்கி அட்லீ எடுத்த புது அவதாரம்

ஜவான் திரைப்படத்திற்காக 10 கோடி சம்பளமாக வாங்கி விட்டதால், இனி இதிலிருந்து அனிருத் குறைந்த சம்பளம் வாங்க வாய்ப்புகள் இல்லை. இதை விட அதிகமாக தான் வாங்குவார். எனவே தற்போதைக்கு தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்களில் அனிருத் தான் முதலிடத்தில் இருக்கிறார். இது குறுகிய காலத்திலேயே அவருடைய வளர்ச்சியை காட்டுகிறது.

மேலும் ஜவான் திரைப்படத்திற்கு பிறகு அனிருத் இந்தியில் அடுத்தடுத்து படங்களுக்கு இசையமைக்கவும் வாய்ப்புகள் அதிகம். தற்போதைக்கு ஜவான் திரைப்படத்தோடு, தளபதி விஜய்யின் லியோ மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படங்கள் இவருடைய இசை அமைப்பில் தொடர்ந்து ரிலீஸ் ஆக காத்திருக்கின்றன.

Also Read:ஜவானை தொடர்ந்து தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அட்லீ.. தளபதியாக நடிக்கப் போவது யார் தெரியுமா?

 

Sharing Is Caring:

அதிகம் படித்தவை