சன் குடும்பத்திற்கு மருமகனாகும் அனிருத்.. சூட்சமமாக சொன்ன ரஜினி, பரபரக்கும் திரையுலகம்

rajini-aniruth
rajini-aniruth

Rajini-Aniruth: சன் குடும்பத்திற்கும், ரஜினிக்கும் நெருங்கிய பந்தம் இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பல படங்களில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் சமீபத்தில் கூட்டணி அமைத்த ஜெயிலர் படமும் தாறுமாறு ஹிட் அடித்துள்ளது. இதனாலேயே இவர்களின் கூட்டணி வெற்றி கூட்டணியாக பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா மேடையில் சொன்ன ஒரு விஷயம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. அதாவது அவர், அனிருத் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அப்போது கூறியிருந்தார். திடீரென இந்த மேடையில் ரஜினி எதற்காக அதை கூற வேண்டும் என்ற பல யூகங்கள் எழுந்தது.

Also read: ஒரே வருடத்தில் 14 படங்கள், தட்டு தடுமாறிய ரஜினி.. நடிக்க பயந்து விலகிய கமல்

அதை தொடர்ந்து கலாநிதி மாறனின் மகள் காவ்யாவை தான் அனிருத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஒரு தகவல் மீடியாவில் காட்டுத்தீ போல் பரவியது. அது மட்டுமின்றி சினிமா விமர்சகரான அபிஷேக் ராஜா தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் மிகப்பெரும் திருமண செய்தி ஒன்று வர இருக்கிறது என்று பதிவிட்டு இருந்தார்.

அந்த வகையில் ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது போல் இந்த அனைத்து விஷயங்களையும் ஒன்று சேர்த்து இதுதான் அந்த திருமண செய்தி என்று ரசிகர்கள் முடிவே செய்து விட்டனர். அதிலும் ரஜினியே இந்த விஷயத்தை மேடையில் சூட்சுமமாக சொல்லிவிட்டார் என்றும் ரசிகர்கள் அலப்பறை செய்து வருகின்றனர்.

Also read: எரிகிற தீயில் பெட்ரோலை ஊற்றிய 2 இயக்குனர்கள்.. சூப்பர் ஸ்டாரை ஃபீனிக்ஸ் பறவையாக மாற்றிய நெல்சன்

மேலும் அனிருத், காவ்யா இருவரின் திருமணமும் உறுதி செய்யப்பட்டதாகவும் விரைவில் இது குறித்த பிரம்மாண்ட அறிவிப்பு வெளிவரும் என்றும் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இது உண்மையா அல்லது வழக்கம் போல் வதந்தியா என்று தெரியவில்லை.

இதற்கான பதிலை அனிருத் மற்றும் சன் குடும்ப தரப்பினர் தான் கொடுக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்பாகவே சன் குடும்பத்திற்கு அனிருத் மருமகன் ஆகிவிட்டார் என்று பேசப்பட்டு வருகிறது. இப்படி பரவிக் கொண்டிருக்கும் இந்த செய்தியால் ஒட்டுமொத்த திரையுலகமும் பரபரப்பாகி இருக்கிறது. விரைவில் இது குறித்த விளக்கம் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: மாவீரன், ஜெயிலர் படத்தால் அடித்த லக்.. டாப் ஹீரோக்களின் பேவரைட்டாக மாறிய நடிகருக்கு கைவசம் குவியும் படங்கள்

Advertisement Amazon Prime Banner