தனுஷின் கேரியருக்கு ஆப்பு வைத்த அனிருத்.. நம்ப வைத்துக் கழுத்தறுத்த சம்பவம்

சமீபகாலமாக தொடர் தோல்வியை கொடுத்து வரும் தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்தின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளார். ஏனென்றால் கொரோனா பரவலுக்கு பின்பு தனுஷின் படங்கள் ஓடிடியில் வெளியாகி வந்தது. தற்போது திருச்சிற்றம்பலம் படம் திரையரங்கு வெளியீட்டுக்காக உருவாகி வருகிறது.

இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்றுள்ள தாய்க்கிழவி பாடல் வெளியானது. அனிருத் மற்றும் தனுஷ் ஏழு வருடத்திற்கு பிறகு இப்படத்தில் இணைந்துள்ளனர். இதனால் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஏற்கனவே வெளியான பாடல் ப்ரோமோ வீடியோவில் அனிருத் மற்றும் நடன இயக்குனர் சதீஷ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ஆனால் அந்த புரோமோவில் தனுஷ் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதாவது அனிருத் மற்றும் தனுஷ் இருவரும் ஒரே படத்தில் பணியாற்றினால் புரோமோ வீடியோவில் இருவருமே இடம் பெற்றிருப்பார்கள்.

அதுமட்டுமல்லாமல் பாடல் ரிலீஸ் வீடியோவில் அனிருத் பாடல் பாடும் காட்சி கண்டிப்பாக இடம்பெறும். ஆனால் தாய்க்கிழவி பாடலில் முழுக்க முழுக்க தனுஷ் மட்டுமே நடனம் ஆடி இருந்தார். அந்த பாடலில் ஒரு இடத்தில் கூட அனிருத் வரவில்லை. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது தனுஷ்-அனிருத் பிரச்சனை இன்னும் தீரவில்லை என தெரிகிறது.

மேலும் திருச்சிற்றம்பலம் படத்தின் புரமோஷனுக்கு அடிக்கடி வந்து போகும் தனுஷ் தற்போது வரை அனிருத்தை நேரில் சந்தித்ததில்லை எனவும் கூறிவருகின்றனர். இதனால் இருவருமே தற்போது வரை ஒருவருக்கொருவர் பார்த்து பேசிக் கொள்ளலாம் உள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் அனிருத் எப்பொழுதும் தனுஷ் படத்திற்கு போடும் பாட்டாக இல்லாமல் அரைத்த மாவையே அரைத்தபடி போட்டிருந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்தப் பாடல் பெரிய அளவில் கவனம் பெறவில்லை. தனுஷ் மீது உள்ள வன்மத்தால் தான் இவ்வாறு அனிருத் மொக்கையான பாட்டை போட்டு இருக்கிறார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும் அனிருத் தனுஷை நம்ப வைத்து இப்படி கழுத்தை அறுத்துவிட்டார் என அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

- Advertisement -