சத்தம் இல்லாமல் 10 நாளில் அனிமல் படம் செய்த வசூல் சாதனை.. ஓவர் அலப்பறை காட்டிய லியோ, ஜெயிலர்

Animal Movie Collection: ஒரு படத்தின் கதையை சாதாரண மக்கள் பார்த்து புரிந்து கொள்ள முடியாத வகையில் தான் தற்போதைய படங்கள் சினிமாவில் கொடி கட்டி பறந்து வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து சண்டை காட்சிகளை மட்டுமே காட்டி வன்முறையை கொட்டித் தீர்க்கிறது. இதுல வேற யாரு யாரோட படம் அதிக வசூல் சாதனையை அடைகிறது என்பது வேற போட்டியாகிவிட்டது.

இதில் மொத்த சினிமாவும் எங்க கைக்குள்ள தான் இருக்கிறது என்பதற்கு ஏற்ப ஓவர் அலப்பறையை காட்டி வந்தது லியோ மற்றும் ஜெயிலர். அதிலும் ஜெயிலர் வசூலை விட முந்த வேண்டும் என்று லியோ போட்டி போட்டுக் கொண்டு வந்தது. ஆனால் ரெண்டு படத்திலுமே சொல்லிக்கிற அளவுக்கு கதை எதுவுமே இல்லை. இருந்தாலும் இந்த வருடத்தில் தமிழ் சினிமாவில் அதிக வசூலை ஏற்படுத்திக் கொண்டது.

அப்படி இருக்கும் பட்சத்தில் இவர்களுடைய படத்தை மிஞ்சும் அளவிற்கு ஓவர் டேக் பண்ணிவிட்டது அனிமல் படம். பாலிவுட் ஹீரோ ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் ஆகியோர் நடித்துள்ள அனிமல் திரைப்படம் டிசம்பர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் தற்போது பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை பெற்றிருக்கிறது.

Also read: ஜவான், பதானை பதம் பார்த்து வரும் அனிமல்.. 6 நாளில் செய்த வசூல் வேட்டை

அதாவது லியோ மற்றும் ஜெயிலர் வசூல் எல்லாம் ஒண்ணுமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு சத்தமே இல்லாமல் பத்து நாளில் 700 கோடி அளவில் வசூல் சாதனை செய்திருக்கிறது அனிமல் படம். இதனை தொடர்ந்து இன்னும் கொஞ்ச நாட்களில் அதிக வசூல் சாதனை செய்த படங்களில் ஒன்றாக முதல் இடத்தை தொட்டுவிடும்.

இதுவரை ரொமாண்டிக் ஹீரோவாக நடித்த ரன்பீர் கபூர் முதன் முதலாக கேங்ஸ்டர் ஆக நடித்திருந்தாலும் வெற்றி பெற்று விட்டார்.  இப்படமும் வன்முறை மற்றும் பழிவாங்கும் முயற்சியுடன் கதை நகர்ந்திருக்கிறது.  அந்த வகையில் லியோ மற்றும் ஜெயிலர் வசூலுக்கு பெரிய சவாலாக வருகிறார் ரன்வீர் கபூர்.

Also read: லிப் லாக்கில் புகுந்து விளையாடிய ரன்பீர், ராஷ்மிகா.. அனிமல் படத்தை பார்த்த ஆலியா பட்டின் ரியாக்சன் இதுதான்