நான் ஈ பட வில்லனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அணில் கும்ப்ளே.. குவியும் பாராட்டு.!

கன்னடத்தில் பிரபல நடிகரான சுதீப் அங்கு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது படங்களுக்கு கன்னட ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. கன்னடம் தவிர தமிழ் மொழியிலும் சுதீப் நடித்துள்ளார். அந்த வரிசையில் இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான நான் ஈ மற்றும் விஜய் நடிப்பில் வெளியான புலி ஆகிய படங்களில் சுதீப் நடித்துள்ளார்.

தற்போது தமிழ் இயக்குனரான வெங்கட்பிரபு சுதீப்பை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இது தவிர பிற படங்களிலும் சுதீப் மிகவும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி அன்று சுதீப் தனது 50வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இந்நிலையில் நடிகர் சுதீப்பின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது காமன் டிபியை முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் என்னுடைய நண்பரும், மூத்த நடிகருமான கிச்சா சுதீப்பின் பிறந்த நாளுக்கான சிடிபி-யை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என அவர் கூறியுள்ளார். இதனையடுத்து இந்த பதிவை பார்த்த நடிகர் சுதீப், அனில் கும்ப்ளே போன்ற பிரபல கிரிக்கெட் வீரர், தன் பிறந்த நாளுக்கான போஸ்டரை வெளியிட்டதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

anil-kumble-kichcha
anil-kumble-kichcha

மேலும், அவரது ட்விட்டர் பக்கத்தில், “இதை விட வேறு சிறந்த பரிசு என்ன இருக்க முடியும்? ஆச்சர்யப்படுத்தி விட்டீர்கள். மிக்க நன்றி” என கூறியுள்ளார்.