அடுத்த தோனி இவங்கதான்னு கணிக்கபட்ட 2 வீரர்கள்.. திறமைகளை புட்டு புட்டு வைக்கும் அனில் கும்ளே

Anil kumble has compared Rishabh Pant and Dhruv jurel  the place of ms dhoni: கேப்டன் கூல் தல மகி என ரசிகர்களால் செல்லமாகவும் அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி ஒரு பிளேயர் மட்டுமல்ல இந்திய கிரிக்கெட் டீமுக்கு பெருமையாவார். அவரது இடத்தை நிகர் செய்வது என்பது இந்திய கிரிக்கெட் அணிக்கு கடினமான காரியம் தான். 

2004 ஆண்டு நடைபெற்ற வங்காளதேசத்திற்கு எதிரான தொடரில் அறிமுகமான போதும் 2006  ஆண்டு தென்னாபிரிக்காவிற்கு எதிராக  தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்திற்கு உள்ளானார் தோனி. 2007 ஆண்டு உலகக் கோப்பையை வென்று  இந்திய இளைஞர்களின் ஹீரோவாக  தனிப்பெரும் இடத்தை தக்க வைத்தார் நம்ம தல. 

இன்று ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் மகேந்திர சிங் தோனி 2019 சர்வதேச விளையாட்டுகளில் இருந்து ஓய்வு பெற்றார். இதனால் அடுத்ததாக அவரது இடத்தை யார் நிரப்புவார் என்ற கேள்வி தொடர்ந்த வண்ணம் உள்ளது. 

Also read: 2024 ஐபிஎல் சென்னை அணி வீரர்கள் விபரம்.. 2 புதுமுக ஆல்ரவுண்டர்களை வளைத்த தல தோனி

தோனியை போன்று ரிசப் பண்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் கூறியுள்ள நிலையில், சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக  நடைபெற்ற டெஸ்ட் தொடரில் விராட் கோலி, இல்லாமல் இந்திய அணி என்ன செய்யப் போகிறது என்று நினைத்த நேரத்தில் கேப்டன் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், துருவ் ஜுரல்  போன்ற நம்பிக்கை நட்சத்திரங்கள்  சிறப்பாக செயல்பட்டு தங்களது பங்களிப்பை நிறைவு செய்திருந்தனர். 

இதில் மூணாவது டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பராக களம் இறங்கி நாலாவது மற்றும் அஞ்சாவது போட்டியில் இக்கட்டான சூழ்நிலையில் அதிக ரன் குவித்ததோடு மட்டுமல்லாமல் ஆட்டநாயகனாகவும் விருது பெற்ற துருவ் ஜுரலை அடுத்த தோனி என்று கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். 

இதனை உறுதி செய்யும் பொருட்டு  முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே இவரது விக்கெட் கீப்பிங், பேட்டிங்கில் டிபன்ஸ் மட்டும் அல்லாமல் அட்டாக் பண்ணி ஆடுவது என பல திறமையை  கண்டு தோனியின் இடத்தை நிச்சயமாக இவர் நிரப்புவார் என்றும், எதிர்காலத்தில் சிறப்பாக செயல்படுவார் என்றும் பாராட்டு பத்திரம் வழங்கி உள்ளார்.

Also read: விராட் கோலியை பார்த்தாலே எங்களுக்கு ரொம்ப நடுங்குது.. வெளிப்படையாய் சொல்லி சரண்டர் ஆன 11 பேர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்