உருவாகிறது ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் 2.. இந்த வாட்டி ரோபோவுக்கு பதில் என்ன தெரியுமா?

இந்திய சினிமாவை பொருத்தவரை தற்போது சிறந்த கதைகளை வைத்து படம் எடுக்கும் சினிமாக்காரர்கள் யார் என்றால் அது நம்ம மலையாள சினிமாதான். சின்ன பட்ஜெட்டில் நல்ல நல்ல கதைகளைக் கொண்ட யதார்த்தமான படங்களை எடுத்து வருகின்றனர்.

கடந்த சில வருடங்களில் மற்ற மொழிப் படங்களை விட மலையாள சினிமாவில் தான் நல்ல நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வந்துள்ளது என்பதை அனைவரும் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

அதிலும் குறிப்பாக 2019ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25 என்ற படத்தை சொல்லலாம். யாரும் யோசிக்காத அழகான கதையை படமாக்கி நல்ல வரவேற்ப்பை பெற்றனர்.

அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் கூகுள் குட்டப்பன் என்ற பெயரில் அந்த படம் ரீமேக் ஆகி வருகிறது. ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் தமிழ் ரீமேக்கை கேஎஸ் ரவிக்குமார் வாங்கி நடித்து வருகிறார்.

60 வயதுக்கு மேல் உள்ள ஆணுக்கும் ரோபோவுக்கும் இடையிலான பாசப்போராட்டம் தான் அந்த படத்தின் மையக்கரு. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும் முதல் பாகத்தில் ரோபோவை பயன்படுத்தி எடுத்தனர். ஆனால் இரண்டாம் பாகத்திற்கு ஏலியன் சம்பந்தப்பட்ட கதையை உருவாக்கி வைத்துள்ளார்கள். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பிக்கப்பட்டு அடுத்த வருட தொடக்கத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

android kunjappan-part-2-cinemapettai
android kunjappan-part-2-cinemapettai

Next Story

- Advertisement -