அந்த நடிகை வீட்டுக்கு அடிக்கடி விசிட் அடிக்கும் ஆண்டவர்.. என்ன சங்கதி தெரியுமா.?

உலகநாயகன் கமலஹாசன் இப்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருந்து கொண்டிருக்கிறார். லைக்கா தயாரிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் ஒரு நடிகையின் வீட்டுக்கு அடிக்கடி ஆண்டவர் விசிட் அடித்து வருகிறாராம்.

அதாவது கமல் என்றால் ஒரு காலத்தில் சர்ச்சைக்கு பேர் போனவர் என கூறப்பட்டது. ஏனென்றால் தன்னுடன் நடித்த பல நடிகைகளுடன் கமல் கிசுகிசுக்கப்பட்டார். ஏனென்றால் படங்களில் அவர் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதால் இவ்வாறு செய்திகள் வெளியானது.

Also Read : ங்கலான் பார்த்து மிரண்டு போன கமல்.. சூர்யாவை தூக்கிவிட்டு விக்ரமை போட்டு உருவாக்கும் வரலாற்று படம் 

அவ்வாறு கமலுடன் கிசுகிசுக்கப்பட்ட ஒரு நடிகையின் வீட்டுக்கு ஆண்டவர் அடிக்கடி சென்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கமலின் விஸ்வரூபம், உத்தம வில்லன் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ஆண்ட்ரியா. ஆரம்பத்தில் பாடகியாக அறிமுகமான இவர் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

மேலும் ஆண்ட்ரியாவை பற்றி பல பிரபலங்கள் கூறுகையில் மிகவும் துணிச்சலான மற்றும் தைரியமான நடிகை என்று தான் கூறியிருக்கிறார்கள். இந்நிலையில் கமல் அவரது வீட்டுக்கு செல்ல ஒரு காரணம் இருக்கிறது. அதாவது கமலின் படத்தில் ஆண்ட்ரியா நடித்தால் நிச்சயம் வெற்றி என்று உலகநாயகன் நம்புகிறார்.

Also Read : கமல் தேடி போய் வாய்ப்பு கொடுக்கும் 5 நடிகைகள்.. ராசியான நடிகை என பெயர் வாங்கிய ஆண்ட்ரியா

இந்த சூழலில் பிசாசு 2 படத்திற்கு பிறகு ஆண்ட்ரியா படங்களில் நடிக்காமல் ஒதுங்கி உள்ளார். இதனால் மீண்டும் ஆண்ட்ரியாவை சினிமாவில் நடிக்க வைக்க கமல் கேட்டுக் கொண்டிருக்கிறாராம். அதுவும் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ள படத்தில் ஆண்ட்ரியா நடித்தால் நன்றாக இருக்கும் என்பது கமலின் விருப்பம்.

ஆனால் இப்போது படங்களில் நடிப்பதில் கவனம் இல்லாமல் இருப்பதால் கமலின் வேண்டுகோளுக்கு ஆண்ட்ரியா மறுப்பு தெரிவித்து வருகிறாராம். மேலும் கமல் விடாப்பிடியாக ஆண்ட்ரியா நடித்தே தீர வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். உலக நாயகனே இவ்வாறு கேட்பதால் ஆண்ட்ரியா இறங்கி வர அதிக வாய்ப்பு இருக்கிறது.

Also Read : முதல் முதலாக மணிரத்னம்- கமல் படத்தில் இணையும் டாப் ஹீரோயின்?. நிறைவேறிய கனவு!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்