அப்பா பெயரை கெடுத்த ஆனந்த்பாபு.. குடியால் குடி மூழ்கிய குடும்பம்

தமிழ் சினிமாவில் தங்கைக்கோர் கீதம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆனந்த் பாபு. அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான ஒரு சில படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. அதனால் ஆனந்த் பாபுவிற்கு தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவு இருந்தது.

அதன்பிறகு இவர் தேர்ந்தெடுத்த கதைகளில் ஒரு சில படங்கள் தோல்வி அடைந்ததை அடுத்து அதன் பிறகு இவரது படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு குறைய தொடங்கியது இருப்பினும் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வந்தார்.

அதன் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி தனது தொழிலில் கவனம் செலுத்தி வந்த ஆனந்த்பாபு விஜய் டிவி மீண்டும் அழைத்து மௌன ராகம் சீரியலில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தது.

இந்த கதாபாத்திரத்தில் நடித்த ஆனந்தபாபு பெரிய அளவில் ரசிகர்கள் ஆதரவு கிடைக்காவிட்டாலும் ஆனந்த்பாபு சரியாக பயன்படுத்திக் கொண்டது விஜய் டிவி. நடிகர்களை பற்றி வெளிப்படையாக பேசும் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் ஆனந்த்பாபு சினிமாவில் சாதிக்க முடியாமல் போனதற்கு காரணம் அவருடைய குடிப்பழக்கம் என தெரிவித்துள்ளார். மேலும் இதனால் பல பட வாய்ப்புகள் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

பல நடிகர்களை பற்றி வெளிப்படையாக பேசும் பயில்வான் ரங்கநாதன் சினிமாவில் இவர் என்னென்ன தவறு செய்துள்ளார் என்பதை இதுவரை யாரும் வெளிப்படையாக கூறாததால் தற்போது வரை தப்பித்து வருகிறார் ஏதாவது ஒரு பிரபலம் பயில்வான் ரங்கநாதன் பற்றிய தகவல்களை பகிர்ந்து விட்டால் அதன் பிறகு பயில்வான் ரங்கநாதன் இப்படி தைரியமாக பேசுவாரா என்பது தெரியவில்லை.

- Advertisement -