வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

இளையராஜா பெயரை கெடுக்கும் வாரிசு.. தொடர்ந்து வரும் சர்ச்சையால் பறிபோகும் வாய்ப்பு

இளையராஜாவின் இசைக்கு மயங்காத ஆளே இல்லை. தமிழ் சினிமாவில் எண்ணற்றப் பாடல்களால் ரசிகர்களின் மனதில் ஆழமாய் பதிந்துள்ளார் இளையராஜா. மொழி தெரியாதவர்களுக்கு கூட இவரது இசையின் மீது அவ்வளவு பிரியம் உள்ளது. இந்நிலையில் இளையராஜாவின் மூன்று வாரிசுகளும் இசையில் ஈடுபாடு உடையவர்கள்.

அவரது மகன்கள் கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பாளராக உள்ளனர். மேலும் இளையராஜாவின் மகள் பவதாரணி பின்னணி பாடகியாக உள்ளார். இளையராஜா போல யுவன் சங்கர் ராஜாவும் தமிழ் சினிமாவில் தனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

ஆனால் அவரது மூத்த வாரிசான கார்த்திக் ராஜா சிறுவயதிலிருந்தே இளையராஜாவுடன் ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு சென்று இசையை கற்றுள்ளார். அதன்பின் படங்களில் இசையமைக்கும் வாய்ப்பும் கார்த்திக் ராஜாவுக்கு கிடைத்துள்ளது. ஆனாலும் தந்தை பெயருக்குப் ஏற்றார்போல் இவரால் சினிமாவில் ஜொலிக்க முடியவில்லை.

தொடர்ந்து கார்த்திக் ராஜா மீது பல குற்றச்சாட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளது. அதாவது சமீபத்தில் இயக்குனர் மிஷ்கின் அளித்த பேட்டியில் கார்த்திக் ராஜாவிற்கு டியூன் போடவே தெரியவில்லை என சகட்டுமேனிக்கு தரக்குறைவாக அவரைப் பற்றி பேசி இருந்தார்.

மிஸ்கின் பலரையும் இப்படித்தான் பேசுவார் என்று எடுத்துக் கொண்டாலும், மறுபுறம் கார்த்திக் ராஜாவை பற்றி நிறைய புகார்கள் வருகிறது. அதாவது கார்த்திக் ராஜாவை தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் படத்திற்கான சம்பளத்தை வாங்கிக்கொண்டு வேறு இசையமைப்பாளர்களை அந்த படத்திற்கு வேலை செய்ய நியமிக்கிறாராம்.

ஒரு முறை என்றால் பரவாயில்லை தொடர்ந்து இதே வேலையை அடிக்கடி செய்து வருகிறாராம் கார்த்திக் ராஜா. அதுமட்டுமல்லாமல் நான் அனுப்பும் இசை அமைப்பாளர்கள் தன்னைவிட திறமைசாலி என்று தயாரிப்பாளர்களிடம் பெருமை பாடிவருகிறாராம். இதனால் தற்போது கார்த்திக் ராஜாவுக்கு வாய்ப்பு கொடுக்கவே தயாரிப்பாளர்கள் தயங்குகின்றனர். இளையராஜாவுக்கு இப்படி ஒரு மகனா என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News