ஒரு அனுபவம், ஒரு அறிமுகம் வெல்லப்போவது யார்.? எதிர்பார்ப்பின் உச்சத்தில் ரசிகர்கள்

2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. முதல் போட்டியான நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் அணிகள் மோதின இதில் பெங்களூர் அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோத உள்ளது. சென்னை அணிக்கு அனுபவம் வாய்ந்த தோனியும். டெல்லி அணிக்கு கேப்டனாக அறிமுகமில்லாத ரிஷப் பந்தும் விளையாட உள்ளனர்.

DelhiCaptain-Cinemapettai.jpg
DelhiCaptain-Cinemapettai.jpg

ஐபிஎல் தொடரில் கடந்த 2 வருடங்களாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்த அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து தொடரின் போது காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் டெல்லி அணியின் புதிய கேப்டனாக இளம் வீரர் ரிஷப் பந்து தேர்வு செய்யப்பட்டார்.

டெல்லி அணியில் அஸ்வின், ஸ்மித் என பல அனுபவ வீரர்கள் உள்ள போதும் ரிஷப் பந்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்த ரிஷப் பந்து, தோனியுடன் டாஸ் போட அருகில் நிற்பதே தனக்கு மிகப்பெரிய தருணம் என தெரிவித்துள்ளார்.

மேலும் தான் தோனியிடம் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டு உள்ளதாகவும் அவற்றை அவருக்கு எதிராகவே  பயன்படுத்த காத்துக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அணியின் சீனியர் வீரர்கள் ஆகிய ஷிகர் தவான், அஸ்வின் ,ரகானே போன்றவர்களின் அறிவுரையை கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Delhicapitals-Cinemapettai.jpg
Delhicapitals-Cinemapettai.jpg

பயிற்சியாளர் பாண்டிங் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப் ஆகியோரிடமும் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எது எப்படியோ வெல்லப்போவது அனுபவமா, அறிமுகமா என்று இன்றைய போட்டியில் தெரிந்துவிடும்.