Actress Gossip News: ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இந்த நடிகைக்கு இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. இதற்கு காரணம் நடிகையின் வசீகரமான முகமும் இளமையும் தான். இன்னும் சில வருடங்களில் முன்னணி ஹீரோக்களின் வரிசையில் வந்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட இந்த நடிகை டாப் ஹீரோ ஒருவருடன் இணைய இருக்கிறார் என செய்திகள் வெளியானது.
இந்த நடிகை தான் அந்தப் படத்தில் நடிக்கப் போகிறார் என உறுதி செய்யப்பட்ட பிறகு திடீரென வேறொரு நடிகையை கதாநாயகியாக அறிவித்து இருக்கிறார்கள். இதற்கு மொத்த காரணமும் அந்த படத்தின் இயக்குனரின் உறவினர் ஒருவர் தான் என சொல்லப்படுகிறது. பார்ப்பதற்கு காமெடி பீசு போல் இருக்கும் அவர் பெண்கள் விஷயத்தில் ரொம்பவும் மோசமாம்.
நடிகையை இந்த படத்தில் ஒப்பந்தம் செய்ய சொன்னதே இவர்தான். டாப் ஹீரோவின் படத்தில் வாய்ப்பு கொடுத்து அம்மணியை வளைத்து போடுவது தான் அந்த உறவினரின் முக்கிய குறிக்கோளாக இருந்திருக்கிறது. ஹீரோவின் பெயரை சொன்னவுடன் மண்டையை ஆட்டி விடுவார் என்று நம்பிய அவருக்கு பெரிய ஏமாற்றம் தான் கிடைத்திருக்கிறது.
உன்னுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் அந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்றால் எனக்கு அப்படி ஒரு வாய்ப்பே தேவையில்லை என்று செருப்பால் அடித்தபடி பதில் சொல்லி ஓட விட்டிருக்கிறார் அந்த நடிகை. இதனால் தான் காதும் காதும் வைத்த மாதிரி படத்தின் ஹீரோயினை சட்டென மாற்றிவிட்டார்கள். அந்த நடிகைக்கே டாப் ஹீரோவுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அட்ஜஸ்ட்மெண்டில் விருப்பமில்லை.
இயக்குனரின் உறவினரும் அந்த நடிகையின் மீது தீராத ஆசையால் எவ்வளவோ முட்டி மோதி பார்த்தும் அவர் இணங்கவில்லை என்பதால், தன் ஆசைக்கு ஓகே சொன்ன மற்றொரு நடிகையை இயக்குனரிடம் சிபாரிசு செய்து இப்போது கதாநாயகியாக கமிட் செய்து இருக்கிறார்.