இறக்க முளைச்ச உடன் பறந்த நடிகை.. உள்ளதும் போச்சே என்ற கவலையில் தயாரிப்பாளர்

நடிகை ஒரு காலத்தில் கோலிவுட்டில் ஒரு பட வாய்ப்பு கிடைக்காதா என்ற நிலைமையில் இருந்தார். ஆனால் இப்போது அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. நடிகை நடித்த சரித்திர படம் அவரை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றது.

அதன் பிறகு டாப் நடிகர்களின் பட வாய்ப்பு நடிகையை தேடிவந்தது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்டு அடுத்தடுத்த படங்களை புக் செய்து விட்டார். இவரது வருகை நம்பர் நடிகைக்கு பதட்டத்தை ஏற்படுத்தி இருந்தது. அதேபோல் அவரை இருக்கிற இடம் தெரியாமல் ஆகிவிட்டார் நடிகை.

இந்நிலையில் உச்ச நட்சத்திரம் ஒருவரின் படத்தில் நடிகை கமிட்டாகி இருந்தார். படத்தின் முதற்கட்ட சூட்டிங் முடிவடைந்தது. இப்போதே தயாரிப்பாளர் மற்றும் நடிகை இடையே சிறு சர்ச்சை எழுந்தது. இதைத்தொடர்ந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்க முடியாத நிலையில் தயாரிப்பு நிறுவனம் இருக்கிறது.

மேலும் நடிகையும் சிறிது காலம் பொறுத்து பார்த்தார். ஆனால் அதற்குள்ளாகவே அக்கட தேசத்தில் பெரிய நடிகர்கள் பட வாய்ப்பு நடிகையை தேடி வர, அதை ரிஜெக்ட் செய்ய மனம் இல்லையாம். இதையே நம்பிகிட்டு இருந்தால் அவ்வளவுதான் என அந்தப் படத்திற்கு டாட்டா காட்டிவிட்டு சென்றுள்ளார்.

இதனால் இப்போது மிகுந்த அப்செட்டில் படக்குழு இருக்கிறது. பண பிரச்சனையில் இருந்த தயாரிப்பாளருக்கு இப்போது எடுத்த காட்சிகளும் நடிகையால் வீணா போய்விட்டது. உள்ளதும் போச்சே என்ற சோகத்தில் இருக்கிறார்.

Sharing Is Caring:

Leave a Comment

சமீபத்திய செய்திகள்