5 வருடங்களுக்கு ஒரு முறை நடந்த விவாகரத்து.. ஆட்சி மாறுவது போல் புருஷனை மாற்றிய நடிகை

சினிமா துறையை பொருத்தவரை திருமணம், விவாகரத்து எல்லாம் சர்வ சாதாரணமாக மாறத் தொடங்கிவிட்டது. அதிலும் இப்போதுள்ள இளம் நடிகைகள் திருமணமான வேகத்திலேயே புகுந்த வீட்டாரின் அடக்குமுறைகளுக்கு பயந்து விவாகரத்தை தேடிச் செல்கின்றனர். அதற்கு மிகப்பெரிய உதாரணமே பால் நடிகை தான்.

திருமணம் செய்த வேகத்திலேயே சுவற்றில் அடித்த பந்து போல் திரும்பி வந்தார். அவரைப் போலவே முன்னணி நடிகை ஒருவரும் இப்போது விவாகரத்து செய்து கணவரை பிரிந்து இருக்கிறார். இது இப்படி இருக்க அந்த காலத்திலேயே ஒரு நடிகை மூன்று திருமணங்களை செய்து இருக்கிறார். அதுவும் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை தன் கணவரை விவாகரத்து செய்துவிட்டு அடுத்த திருமணமும் செய்து இருக்கிறார்.

Also read: உச்சத்தில் இருந்த சினிமா வாழ்க்கை.. 42 வயது ஆன்ட்டி நடிகையின் மோகத்தால் சூனியம் வைத்துக் கொண்ட நடிகர்

அந்த காலகட்டத்தில் மிகவும் பிரபலமாக இருந்த அந்த நடிகை இப்போது அம்மா, பாட்டி கதாபாத்திரங்களில் அசத்திக் கொண்டிருக்கிறார். மிகவும் எதார்த்தமாக நடிக்கும் அந்த நடிகைக்கு திருமண வாழ்வு மிகவும் கசப்பானதாக தான் இருந்திருக்கிறது. ஏனென்றால் பெற்றோர்கள் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்ட அந்த நடிகைக்கு ஐந்து வருடம் கூட அந்த திருமண வாழ்வு நீடிக்கவில்லை.

இதனால் முதல் கணவரை விவாகரத்து செய்த நடிகை மறுவருடமே ஒரு சீரியல் நடிகரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த வாழ்வும் ஐந்து வருடங்களுக்கு மேல் செல்லவில்லை. நடிகை தன் இரண்டாவது கணவரையும் விவாகரத்து செய்து விட்டு சில வருடங்கள் தனிமையில் வாழ்ந்து வந்தார்.

அதன் பிறகு மற்றொரு சினிமா நடிகரின் மேல் அவருக்கு காதல் வந்திருக்கிறது. அது திருமணத்திலும் முடிந்து இருக்கிறது. தற்போது மூன்றாவது கணவருடன் தான் அவர் வாழ்ந்து வருகிறார். ஆனால் இந்த ஜோடியும் தற்போது மனக்காசப்பு ஏற்பட்டு தனித்தனியாக வாழும் முடிவில் இருக்கிறார்களாம். தற்போது வயது மூப்பின் காரணமாக நடிகை அவ்வளவாக நடிப்பதில்லை என்றாலும் அவர் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராகவே இருக்கிறார்.

Also read: அந்த ஹீரோயினை போட்டதே அட்ஜஸ்ட்மெண்டுக்காக தான்.. தயாரிப்பாளருக்கு ஐட்டம் நடிகையை பலி கொடுத்த இயக்குனர்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்