ஒரே மாதத்தில் 30 படங்களில் ஹீரோயினாக நடித்த நடிகை.. 12 படங்களுக்கே பெருமூச்சு விடும் விஜய் சேதுபதி

பாலிவுட் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார் விஜய் சேதுபதி. இருப்பினும் தமிழில் வரும் பல பட வாய்ப்புகளை விடாமல் நடிக்கும் இவர் தற்பொழுது மும்பைக்கும், தமிழ்நாட்டிற்கும் நடையா நடந்து கொண்டிருக்கிறார்.

மாதத்திற்கு ஒரு படம் என்ற கணக்கில் வருடத்திற்கு 12 படங்களில் கால்ஷீட் கொடுத்துள்ளார். ஆனால் இவர் இந்த 12 படங்களுக்கே பெருமூச்சு விட்டு வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க 60-70களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் புகுந்து பட்டையை கிளப்பினார் நம் கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி.

Also Read:அதல பாதாளத்தில் தொங்கும் விஜய் சேதுபதி.. பத்து நாளில் இத்தனை படம் பிளாப்பா.?

தமிழ் சினிமாவில் இதுவரை இவரை தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு பிரபலங்களாகிய எம்ஜிஆர், சிவாஜியுடன் இணைந்து நடித்திருக்கிறார். தன் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒரு நாளுக்கு மூன்று ஷிப்ட் போட்டுக்கொண்டு நடத்தியிருக்கிறார்.

அதாவது இவர் காலையில் 6 மணி முதல் 2 மணி வரை, 3 மணி முதல் 9 மணி வரை மற்றும் 9:00 மணி முதல் அதிகாலை 2 வரை தனக்குள்ளே ஷிப்ட் போட்டுக்கொண்டு ஓய்வின்றி நடித்திருக்கிறார்.கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என்று அழைக்கப்படும் சரோஜாதேவி பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகளை பெற்றிருக்கிறார்.

Also Read:விஜய் சேதுபதிக்கு வந்த அடுத்த சோதனை.. புதுசு புதுசா பிரச்சனையை கிளப்புறாங்க!

நடிப்பில் இவர் கொண்ட பங்காற்று இத்தகைய விருதுகளை பெற்று தந்தது. நாடோடி மன்னன், கல்யாண பரிசு, குடும்பத் தலைவன், படகோட்டி, தேனும் பாலும் போன்ற 200க்கும் மேற்பட்ட படங்களை நடித்த பெருமையை இவரையே சேரும்.

இவ்வாறு இவர் ஒரு மாதத்திற்கு 30 படங்களில் நடித்திருக்கிறார் என்பது ஆச்சரியத்தை உண்டாக்குகிறது . இவரை ஒப்பிடுகையில் தற்பொழுது விஜய் சேதுபதி திணறி வருவது வேதனை கொள்ளச் செய்கிறது.

Also Read:ராசியில்லாத விஜய் சேதுபதி படம்.. சூப்பர் ஹிட் படத்தை வாட்டி வதைக்கும் முன்னணி பிரபலங்கள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்