திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

அப்பாவின் சொத்தை வாரி இறைக்கும் மகன்.. அந்தரங்க தேவைக்காக கோடிகளை செலவழிக்கும் நடிகர்

அப்பா சினிமாவில் மிகப் பிரபலமாக இருந்த நிலையில் தனது வாரிசுகளுக்காக கஷ்டப்பட்டு கோடிகளில் சொத்துக்களை சேர்த்து வைத்திருந்தார். அதோடு மட்டுமல்லாமல் சினிமாவில் அவருக்கு பேரும், புகழும் இருந்தது. ஆனால் அதை குட்டிச்சுவராக மாற்றுவதற்காக பிறந்திருந்தார் அவருடைய மகன்.

அதாவது தன்னுடைய வாரிசு சினிமாவில் எப்படியாவது கொண்டு வந்து விட வேண்டும் என நடிகர் போராடினார். இதனால் பெரிய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ஆகியோரிடம் சென்று தனது மகனுக்காக வாய்ப்புகளையும் வாங்கிக் கொடுத்தார். முதலில் அவர் நடித்த படங்கள் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

ஆனால் நடிகரின் நடவடிக்கை மோசமாக மாறிவிட்டது. இந்த சூழலில் தன்னுடன் நடிக்கும் நடிகைகளில் சீனியர் நடிகை என்று கூட பார்க்காமல் எல்லோரையுமே அட்ஜஸ்ட்மென்ட் செய்து வந்தார். இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் நடிகருடன் நடிக்கவே சில நடிகைகள் தயங்கி வந்தனர். அதுவும் இளம் நடிகை ஒருவர் மீது நடிகர் கண்ணாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நடிகருக்கு திடீரென ஒரு விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இதனால் இளம் நடிகை அவரை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். அதையே சாக்காக வைத்துக் கொண்டு நடிகை இடம் எல்லை மீறி நடிகர் நடந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அந்தரங்க தேவைக்காக கோடிகளை வாரி இறைத்திருக்கிறார்.

இவ்வாறு அப்பா சேர்த்து வைத்த மானம், மரியாதை, பணம் என அனைத்தையும் பொம்பளை சொக்குகாக நடிகர் இழந்துவிட்டார். அதன் பிறகு படங்களிலும் அவருக்கு வாய்ப்பு குறைய தொடங்கியது. இதனால் சில வருடங்களிலேயே ஃபீல்ட் அவுட் ஆகிவிட்டார். இப்போது நடிகரின் நிலைமையை மிகவும் மோசமாக இருக்கிறது.

- Advertisement -

Trending News