சார்பட்டா பசுபதி கேரக்டர் வாய்ப்பை மிஸ் செய்த டாப் நடிகர்.. போன் பண்ணி ஆர்யாவிடம் ஒரே புலம்பல்

ஆர்யா மற்றும் பா ரஞ்சித் கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. தியேட்டரில் கொண்டாடிய வேண்டிய படத்தை அமேசான் தளத்தில் நேரடியாக வெளியிட்டது கொஞ்சம் சோகம் தான்.

இருந்தாலும் தியேட்டர்களில் வெளியாகியிருந்தால் கூட மொழி கடந்து பல ரசிகர்களை கவர்ந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அந்த வகையில் சார்பட்டா திரைப்படம் அனைத்து மொழி ரசிகர்களுக்கும் பிடித்த படமாக அமைந்துவிட்டது.

இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். ஆர்யாவின் கபிலன், டான்சிங் ரோஸ், வேம்புலி, டாடி என சொல்லிக்கொண்டே போகலாம். அதிலும் முக்கியமாக இந்த படத்தில் குறிப்பிட வேண்டியது பசுபதி நடித்த ரங்கன் வாத்தியார் என்ற கேரக்டர் தான்.

பசுபதியை நடிப்பை பார்த்து மிரண்டு போன பலரும் அவரை தங்களது அடுத்தடுத்த படங்களில் நடிக்க வைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் யார் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா?

அவர் தான், நம் உயரமான மனிதர் சத்யராஜ். முதன்முதலில் பார் ரஞ்சித் இந்த கதாபாத்திரத்தை நடிகர் சத்யராஜிடம் தான் கேட்டாராம். ஆனால் அப்போது சத்யராஜ் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்ததால் இந்த வாய்ப்பை மிஸ் செய்தாராம்.

அதன் பிறகு அந்த வாய்ப்பு பசுபதிக்கு செல்ல, அவர் எப்படி ரங்கன் வாத்தியாராக வாழ்ந்து காட்டினார் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்நிலையில் சமீபத்தில் படத்தை பார்த்த சத்யராஜ், ஆர்யாவிடம் போன் செய்து படத்தை போற்றிப் புகழ்ந்து தள்ளியுள்ளார். அதே நேரத்தில் ரங்கன் வாத்தியார் கதாபாத்திரத்தை மிஸ் செய்து விட்டேன் எனவும் வருத்தப்பட்டாராம்.

pasupathi-sarpatta-cinemapettai
pasupathi-sarpatta-cinemapettai
- Advertisement -