அஜித், அரவிந்த்சாமிக்கு முன்பே வெள்ளை தோல் நிறத்தில் ரசிக்கப்பட்ட நடிகர்.. அதிகமாக ரசித்த ரசிகைகள்

சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் சில நடிகர்களின் அழகுக்கு மயங்காதவர்கள் யாரும் கிடையாது. அந்த மாதிரி நடிகர்களை தேடி போய் திரையில் பார்த்து ரசிப்பவர்கள் ஏராளமானவர்கள். அந்த வகையில் நம் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்ட நடிகர்கள் என்றால் இந்த காலத்தில் அஜித், அரவிந்த்சாமி இவர்கள் ரெண்டு பேரை சொல்லலாம்.

அந்த அளவிற்கு இவர்களுக்கு பெண் ரசிகர்கள் அதிகம் என்று அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இவர்களுக்கு அடுத்து வந்த நடிகர்களும் ஒரு சில பேர் இருக்கிறார்கள். ஆனால் நமக்கு அழகு என்று சொன்னதும் இவங்க தான் ஞாபகத்துக்கு வருவார்கள். ஆனால் இவர்களுக்கு முன்னதாகவே இவரை மிஞ்சும் அளவிற்கு இருந்த நடிகர் தான் எம்ஜிஆர். இவர் பெண்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றே சொல்லலாம்.

Also read: அஜித்தின் வாழ்நாள் ஆசை நிறைவேறியது.. அதைப்போல் கனவை நிறைவேற்ற துடிதுடிக்கும் இளையராஜா

அத்துடன் இவர் நடித்த இடைப்பட்ட காலத்திலேயே இவருக்கு இணையாக இன்னொரு நடிகர் பெண்களை வசியப்படுத்தி இருக்கிறார் என்றால் அது சரத்பாபு தான். இவருடைய சிவந்த நிறம், அழகிய தோற்றம் மற்றும் அமைதியான முகம் என்று இவரை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். அப்படிப்பட்ட இவர் நடித்த காலத்தில் பெண்களை அதிகளவில் கவர்ந்திருக்கிறார்.

அத்துடன் இவரைப் பார்ப்பதற்காகவே அந்த காலத்தில் வீட்டிற்கு தெரியாமல் திருட்டுத்தனமாக பல பெண்கள் தியேட்டர்களில் சென்று வரை பார்த்து ரசிப்பார்களாம். அந்த அளவிற்கு இவருக்கு பெண் ரசிகர்கள் இருந்திருக்கிறார்களாம். இது தற்போது இவர் இறந்த பின்பு இவருடைய நண்பர் இந்த செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.

Also read: சரத்பாபுக்கு தயாரிப்பாளராக சம்பளம் போட்ட பயில்வான்.. குறை சொல்ல முடியாமல் கண்கலங்கிய சம்பவம்

பொதுவாகவே ஒருவர் இறந்த பின்பு அவரைப் பற்றி நல்ல விஷயங்கள் நிறைய வெளி வருகிறது என்றால் அவர் அந்த அளவிற்கு நல்லவராக இருந்தால் மட்டும் தான் முடியும். அது சரத் பாபு விஷயத்தில் ஊர்ஜிதமாக இருக்கிறது. அதிலும் அந்த காலத்தில் இவர் படங்களில் பார்த்து ரசிப்பவர்கள் பெண்கள் தான் என்றும் இவருடைய சிரிப்பால் அனைவரையும் கிரங்கடிப்பார் என்பது மிகவும் ஆச்சரியத்தை கொடுக்கிறது.

அப்படிப்பட்ட இவர் தற்போது நம்முடன் இல்லை என்பதை மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. ஆனாலும் இவர் வாழ்ந்த காலத்தில் நடித்த படங்கள் மூலமாக இப்பொழுது வரை பெயர் பெற்று தான் வருகிறார். அதிலும் இவர் முள்ளும் மலரும் படத்தில் ஜீப் ஓட்டிக்கிட்டு போகும்போது இவருடைய வழக்கமான சிரிப்பால் பாடிய “செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா” இந்த பாடல் இப்பொழுதும் மெய்சிலிர்க்க வைக்கும்.

Also read: 90-களில் ரஜினிக்கு பயத்தை காட்டிய 2 நடிகர்களின் சம்பளம்.. ஒன்னுக்கு ஒன்னு சலச்சது இல்ல

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்