ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

இயக்குனருக்காக நிறத்தை மாற்றிய நடிகர்.. காத்திருந்தும் காலதாமதம் செய்யும் அவலம்

வாரிசு நடிகராக சினிமாவில் நுழைந்த ஒரு நடிகர் தொடர்ந்து தோல்வி படங்களை மட்டுமே கொடுத்து வந்தார். இதனால் நடிகரின் தந்தை தனது செல்வாக்கை வைத்து வெற்றி இயக்குனரிடம் மகனை ஒப்படைத்தார். ஏனென்றால் அந்த இயக்குனர் கல்லாக இருந்தாலும் அதை சிற்பமாக மாற்றக்கூடியவர். ஆகையால் அவரை நம்பி மகனை கொடுத்து விட்டார்.

அந்த இயக்குனரின் அறிவுறுத்தலின்படி வாரிசு நடிகர் பல விஷயங்களை செய்து வருகிறாராம். பார்ப்பதற்கு பாலிவுட் ஹீரோ மாதிரி இருக்கும் அவரை கருப்பாக மாற்ற சொல்லி இருக்கிறார் இயக்குனர். அதனால் உச்சி வெயில் மாடியில் தினமும் பல மணி நேரம் நின்று தனது நிறத்தையே மாற்றி விட்டாராம்.

Also read: பலவந்தப்படுத்தி கொலை செய்த நடிகையின் கணவன்.. 11 ஆண்டுகளாக வச்சு செய்த கர்மா

இதே போல் ஒன்றா, இரண்டா நிறைய விஷயங்களை இயக்குனர் சொல்லிற்கு இணங்க நடிகர் செய்து வருகிறார். ஆனால் இவர்கள் இணைவதாக அறிவிப்பு வந்தே இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் தற்போதும் காலதாமதம் ஆகிறது. ஆனால் நடிகரோ கண்டிப்பாக இயக்குனர் வருவார் என காத்திருக்கிறார்.

இந்த சமயத்தில் டாப் நடிகர் ஒருவரின் படத்தை இயக்குனர் இயக்குவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இதனால் உச்சகட்ட பீதியில் வாரிசு நடிகர் இருக்கிறாராம். ஏனென்றால் டாப் நடிகரின் படத்தை இயக்கச் சென்றால் எப்படியும் இரண்டு வருடங்கள் இழுத்து விடும் என்ற பயத்தில் உள்ளாராம்.

ஆனால் இயக்குனரோ உங்கள் படத்தை முடித்து விட்டதால் டாப் நடிகரின் படத்தை இயக்குவேன் என்று வாக்குறுதி கொடுத்துள்ளாராம். ஆனாலும் தற்போது வரை வாரிசு நடிகரின் படம் தொடங்காததால் வருத்தத்தில் உள்ளாராம். காலதாமதம் ஆனாலும் நல்ல படமாக வரும் என்று வாரிசு நடிகர் மனதை தேற்றி கொண்டிருக்கிறாராம்.

Also read: 10 நிமிடம் அட்ஜஸ்ட்மெண்ட், லேடி சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வாய்ப்பு.. ஆடிஷனில் நடிகைக்கு நடந்த கொடுமை

- Advertisement -

Trending News