ரஜினியே நடிக்கிறாரு நான் நடிச்சா என்ன.? விஜய் மகன் என்னோட ஃபேன் தான் என சொல்லிட்டு திரியும் காமெடி பீசு

Superstar Rajinikanth: சினிமாவில் சில கதாநாயகர்கள் தன்னம்பிக்கையோடு உழைத்து கடின உழைப்பால் ஜெயித்து வருகிறார்கள். ஒரு சிலரோ ஓவர் கான்பிடெண்டால் மண்ணை கவ்வுகிறார்கள். அப்படி தன்மீது தனக்கே அதிக நம்பிக்கை வைத்து, ஏடாகூடமாக பேசி இன்றுவரை தமிழ் சினிமா ரசிகர்களால் காமெடி பீஸ் ஆக பார்க்கப்படும் இந்த நடிகர், சமீபத்திய பேட்டி ஒன்றில் மீண்டும் தன்னுடைய ஓவர் கான்பிடன்ட்டை காட்டி இருக்கிறார்.

பவர் ஸ்டார் என தமிழ் சினிமா ரசிகர்களால் கலாய்க்கப்படும் ஸ்ரீனிவாசன் தான் இந்த கான்பிடன்ட் கதாநாயகன். இவர் லத்திகா என்னும் படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். கிட்டத்தட்ட பல கோடிகள் செலவு பண்ணி தியேட்டருக்கு ஆடியன்ஸ்களை காசு கொடுத்து வரவழைத்து தன்னுடைய முதல் படத்தை 200 நாட்கள் ஓட வைத்த திறமைசாலி.

Also Read:ஆண்டவருக்கே விபூதி அடித்த சூப்பர் ஸ்டார்.. ஆசை காட்டி தன் பக்கம் இழுத்த சன் பிக்சர்ஸ் மாறன்

படம் ரிலீஸ் ஆகி கொஞ்ச நாளிலேயே பல மோசடி வழக்குகளில் மாட்டிய இந்த மன்னன், தன்னுடைய காமெடி பேச்சுக்களின் மூலம் ஒரு சில பட வாய்ப்புகளை பெற்றார். இவர் நடித்ததில் கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் உடல்நிலை சரியில்லாத பவர்ஸ்டார் படம் நடிப்பதை நிறுத்திவிட்டு, பொது வெளிகளிலும் தலை காட்டாமல் இருந்தார்.

எப்போது சமீபத்திய பேட்டி ஒன்றின் மூலம் மீண்டும் வைரலாகிவிட்டார் பவர் ஸ்டார். அந்த பேட்டியில் சூப்பர் ஸ்டாரே இந்த வயதில் ஹீரோவாக நடிக்கும் பொழுது, நான் ஹீரோவாக நடித்தால் என்ன, மீண்டும் நான் ஹீரோவாக ஒரு படம் நடிக்க இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். மேலும் தன்னுடைய ரசிகர் மன்றத்தையும் விரைவில் ஒருங்கிணைக்கப் போவதாக சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.

Also Read:ரஜினி எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் படத்தை தயாரித்த சின்ன நடிகர்.. ஒத்த பைசா இல்லாமல் இறந்து போன சோகம்

மேலும் ஒரு விழாவின் போது இவருக்கு தளபதி விஜய்யின் பக்கத்தில் உட்கார வாய்ப்பு கிடைத்ததாகவும், அப்போது விஜய் இவரிடம் உலகமே எனக்கு ரசிகராக இருக்கிறது, ஆனால் எங்கள் வீட்டில் உங்களுடைய தீவிர ரசிகர் ஒருவர் இருக்கிறார் என சொல்லி இருக்கிறார். அதாவது தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் பவர் ஸ்டாருக்கு தீவிரமான ரசிகர் என்று சொன்னது போல் பில்டப் கொடுத்து இருக்கிறார்.

இதுவும் பத்தாது என்று தமிழ் சினிமா ரசிகர்களே மிரண்டு போகும் அளவுக்கு மற்றொரு அறிவிப்பையும் கொடுத்திருக்கிறார். அதாவது விரைவில் லத்திகா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக சொல்லி இருக்கிறார். லத்திகா படத்தை பார்த்தவர்களுக்கு மட்டுமே அதன் பார்ட் 2 எப்படி இருக்கும் என்ற பயம் கண்டிப்பாக தெரியும்.

Also Read:ஷங்கர் பேச்சை கேட்காமல் போன ரஜினி.. ராங் ரூட்டில் சிக்கி விழி பிதுங்கிய சம்பவம்

- Advertisement -