ஆல் ரவுண்டராக கலக்கி வந்த சத்யராஜ்.. ஒரே படத்தால் மொத்த வாய்ப்பையும் தட்டிச் சென்ற நடிகர்

Actor Sathyaraj: நாற்பது வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் நடித்து வரும் சத்யராஜ் வில்லனிலிருந்து ஹீரோவாக மாறி இப்போது குணசித்திர நடிகர் என பல பரிமாணங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் பிரபல நடிகர் ஒருவர் ஒரே படத்தின் மூலம் இவருக்கு வர இருந்த வாய்ப்பு மொத்தத்தையும் தட்டிச் சென்றிருக்கிறார்.

அதாவது சமீப காலமாகவே சத்யராஜ் இல்லாமல் எந்த படங்களும் வெளிவருவது கிடையாது. அந்த அளவுக்கு இவர் அப்பா கதாபாத்திரங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் இப்போது இவரை ஓரம் கட்டி நடிகர் சரத்குமார் முன்னிலை வகிக்கிறார்.

Also read: ஹீரோவை விட சத்யராஜ் நின்னு பேசி சாதித்து காட்டிய 5 படங்கள்.. ரோசம் புடிச்ச சிவனாண்டி செஞ்ச அக்கப்போர்

80, 90 காலகட்டத்தில் பிசியான ஹீரோவாக இருந்த இவர் இப்போது வில்லன், அப்பா கேரக்டர் என அனைத்திலும் புகுந்து விளையாடி வருகிறார். வாரிசு, பொன்னியின் செல்வன் போன்ற பல படங்கள் இவருக்கு ரீ என்ட்ரி ஆக அமைந்திருந்தாலும் சமீபத்தில் வெளியான போர் தொழில் தான் இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் தற்போது சரத்குமாரை தேடி பல வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறதாம். அப்பா கேரக்டர்கள் மட்டுமல்லாமல் வில்லன் கதாபாத்திரங்கள் கூட இவரை தேடி வந்து கொண்டிருக்கிறது. இதனால் குஷியான சுப்ரீம் ஸ்டார் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை அமோகமாக ஆரம்பித்துள்ளார்.

Also read: கணவர்களின் ஆதிக்கத்தால் 5 நடிகைகளின் கேரியருக்கு வந்த ஆப்பு .. சத்யராஜ் உருட்டிய ஆறடி அரேபிய குதிரை

ஆரம்பத்தில் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்று அடாவடி பண்ணிக் கொண்டிருந்த இவர் இப்போது முரண்டு பிடிக்காமல் தேடிவரும் வாய்ப்புகள் அனைத்தையும் ஏற்று வருகிறார். அந்த வகையில் தற்போது ரிலீஸ் ஆகும் முக்கால்வாசி படங்களில் சரத்குமார் இடம் பெற்று விடுகிறார்.

இதனால் ஆல் ரவுண்டராக கலக்கி வந்த சத்யராஜுக்கு தான் வாய்ப்புகள் குறைந்து விட்டது. ஹீரோவாக இருக்கும் போது தான் போட்டி என்று பார்த்தால் இப்போது கேரக்டர் ரோலுக்கு கூட போட்டி வந்துவிட்டது. அந்த வகையில் தமிழ் மட்டுமல்லாமல் அக்கட தேசத்திலும் கூட இவர்களுக்குள் போட்டி நடைபெற்று வருகிறது.

Also read: சினிமாவில் ஈகோ பார்க்காத ஒரே நடிகர்.. சத்யராஜ் உடன் பட்டையை கிளப்பிய காம்போ

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்