பேங்கில் அஞ்சு பைசா இல்லையா? கவலையே படாதீங்க.. பணம் இல்லாமலேயே 3 லட்சம் வரை எடுக்கலாம்

பேங்க் அக்கௌண்டில் இருக்கும் பணத்தையே எடுக்க முடியவில்லை இதில் எப்படி இல்லாத பணத்தை எடுப்பது என்பது குழப்பமாக இருக்கலாம். ஆனால் அதற்கு தான் பஞ்சாப் நேஷனல் பேங்க் ஒரு பெரிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது கண்டிப்பாக வேலை செய்யும் பல ஊழியர்களுக்கு உபயோகமாக இருக்கும்.

சிறப்பு சம்பள கணக்கு என்ற ஒரு திட்டத்தை பஞ்சாப் நேஷனல் பேங்க் தற்பொழுது அறிமுகம் செய்து வைத்துள்ளது. இந்த திட்டத்தை பயன்படுத்தி ஜீரோ பேலன்ஸ் அக்கௌன்ட் ஓபன் பண்ணி கொள்ளலாம். அதில் மத்திய மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், பெரிய  நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், கல்வி நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் என பலரும் இந்தக் கணக்கைப் பயன்படுத்தி பயன் பெறலாம்.

நேஷனல் பேங்க் இதனை நான்கு பிரிவுகளாக பிரித்து வைத்துள்ளது. அதாவது சில்வர், கோல்டு, பிரிமியம், மற்றும் பிளாட்டினம் என நான்கு பிரிவுகளிலும் சம்பளம் பெரும் மற்றும் இதர வாடிக்கையாளரின் பணப் பரிவர்த்தனையை பொருத்து ஓவர் டிராப்ட் செய்யும் வசதி உள்ளது.

சில்வர் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை சம்பளம் வாங்க வேண்டும். கோல்ட் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் 25 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை சம்பளம் வாங்க வேண்டும். பிரீமியம் அக்கவுண்ட் வைத்துள்ளவர்கள் 75 ஆயிரம் முதல் 1.5 லட்சம் வரை சம்பளம் வாங்க வேண்டும், பிளாட்டினம் அவர்கள் 1.5 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்க வேண்டும்.

bank
bank

பஞ்சாப் நேஷனல் பேங்கில் பிரைமரி அக்கவுண்ட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தனது இரண்டு மாத சம்பளத்தை ஓவர் டிராப்ட் செய்து எடுத்துக் கொள்ளலாம். அந்த பணத்தை ஆறு மாதங்களுக்கு வட்டியுடன் செலுத்த வேண்டும். இதன் மூலம் பிளாட்டினம் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் மூன்று லட்சம் வரை பணத்தை எடுக்கலாம். இது மட்டுமில்லாமல் இந்த நான்கு பிரிவு வாடிக்கையாளர்களுக்கும் 20 லட்சம் வரையில் விபத்து காப்பீடும் தாராளமாக வழங்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்