அமிதாப்பச்சனை மிஞ்சிய ஸ்ரீதேவியின் சம்பளம்.. மறைக்க முயன்ற வரலாறு

இந்திய சினிமாவில் ஒரு காலத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருந்த அமிதாப் பச்சனை ஹிந்தி சினிமாவுக்கு சென்ற இரண்டே வருடங்களில் ஸ்ரீதேவி ஓரம் கட்டி விட்டார் என்ற தகவல் இன்றுவரை ஹிந்தி சினிமாவில் மறைக்கப்பட்ட வரலாறாகவே இருக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இந்திய சினிமாவை ஆட்டிப் படைத்த நடிகைகளில் மிக முக்கியமானவர் ஸ்ரீதேவி. தமிழில் உள்ள அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடன் ஒன்றுக்கு இரண்டு படங்களில் ஜோடி போட்டு அன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவின் டாப் நடிகையாக வலம் வந்தவர். தமிழில் மட்டுமல்ல ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவில் ஸ்டார் நடிகையாக மாறினார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருப்பவர்களை இந்திக்கு அழைத்துச் செல்வது ஒன்றும் புதிதல்ல. ஆனால் அங்கேயே தன்னுடைய திறமையை நிரூபித்து செட்டில் ஆனவர்கள் மிகவும் குறைவுதான். இவ்வளவு ஏன் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் கூட ஹிந்தி சினிமாவில் நிலைக்க முடியவில்லை. நிலைக்க முடியவில்லை என்று சொல்வதை விட நிலைக்க விடவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

sridevi
sridevi

அன்றைய தேதிக்கு இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்றால் அது அமிதாப்பச்சன் தான். கிட்டத்தட்ட 30 லட்சம் அப்போது சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். ஆனால் ஹிந்தி சினிமாவுக்கு சென்ற இரண்டே வருடங்களில் அமிதாப் பச்சனின் சம்பளத்தை ஓரம்கட்டி 35 லட்சம் சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்தார் ஸ்ரீதேவி.

இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் கண்டிப்பாக தன்னுடைய மார்க்கெட் திண்டாடி விடும் என்பதை உணர்ந்த அமிதாப்பச்சன் தன்னுடைய நெருங்கிய வட்டாரங்களிலும் தயாரிப்பாளர்கள் இடமும் சொல்லி வேண்டுமென்றே இந்த உண்மையை மறைத்து விட்டதாக அப்போதே பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதில் வழக்கம் போல் உண்மை இல்லை என மறுத்து விட்டனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்