மகளை தங்கத்தால் இழைத்து அழகு பார்த்த ராதா.. சென்னை முதல் திண்டுக்கல் வரை உள்ள சொத்துக்கள்

Ambika and Radha net worth: 80 களில் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் போட்டி போட்டுக் கொண்டு  நடித்த சகோதரிகள் தான் அம்பிகாவும் ராதாவும். கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் முன்னணி கதாநாயகர்கள் அனைவருடனும்  நடித்துள்ளனர்.

இந்த ஸ்டார் சகோதரிகளுக்கு பலமொழிகளிலும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இருவரும் 200 படங்கள் மேல் நடித்து பல வருடங்கள் சினிமாவில் கோல்லோச்சிய பின் கல்யாணம், குழந்தைகள் என சிறிய இடைவேளை எடுத்து கொண்டார்  திரும்பவும்.

ரியாலிட்டிஷோ,சீரியல் என பிசியாகவே இருக்கின்றனர் கடினமாக உழைப்பது என்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் உழைத்த பணத்தை முதலீடு செய்வது என்பது இக்கலையை நன்றாக கற்று வைத்துள்ளனர் இச்சகோதிரிகள்.

Also Read:அக்கா தங்கை இணைந்து வெற்றி கண்ட 6 படங்கள்.. அம்பிகா ஸ்கோர் செய்தும் தட்டி தூக்கிய ராதா

அம்பிகா,ராதா இருவருமே எப்போதும் மதிப்பு குறையாத மண்,பொன் இரண்டிலும் முதலீடு செய்துள்ளனர். சமீபத்தில் ராதா தனது மகள் கார்த்திகாவின் திருமணத்தில் மணப்பெண்ணுக்கு உச்சி முதல் கால் வரை தங்கத்திலேயே இழைத்து இருந்தார்.

ஒற்றையாக இல்லாமல் கற்றையாக 5 ஸ்டார் ஹோட்டல்ஸ், சென்னையில் அப்பார்ட்மெண்ட்ஸ், வில்லாஸ் என பல சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். இது தவிர திண்டுக்கல்லில் ஒரு பெரிய மில். சென்னையில் 25 ஏக்கரில் ஒரு சினிமா ஸ்டூடியோ வைத்து அதனை  நாடகங்கள், நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விட்டு அதன் மூலமும் கல்லாகட்டி வருகின்றனர். இத்தனையும் வைத்துள்ள இவர்களின் சொத்து மதிப்பு 300 கோடிக்கும் மேல் என அறியப்படுகிறது.

Also Read:அப்பா, மகனுடன் ஜோடி போட்ட 2 நடிகைகள்.. 24 வயது வித்தியாசத்தில் நடித்த அம்பிகா

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்