எலான் மஸ்க் போட்ட பிள்ளையார் சுழி.. 24*7 மணி நேரம், கெட்டு போகும் பழங்குடியின மக்கள்

Amazon tribles: தன்னுடைய தொழில்நுட்ப அறிவால் உலக மக்களை மிரட்டிக் கொண்டிருக்கிறார் எலான் மஸ்க் இவர் அடுத்து என்ன செய்வார் என்று நினைத்தாலே பல உலக தலைவர்களுக்கு திக் என்றுதான் இருக்கும். Space X, X போன்ற நிறுவனங்களின் முதலாளியாக இருக்கும் இவர் ஆரம்பித்த புது தொழில்நுட்பம் தான் ஸ்டார்லிங்க்.

அதாவது சாட்டிலைட் மூலம் இன்டர்நெட் வசதி இல்லாத இடங்களுக்கும் இன்டர்நெட் கொடுப்பது. சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்பது போல் இந்த டெக்னாலஜி மொத்தமாக அமேசான் காட்டு பழங்குடியின மக்களை கெடுத்து விட்டதாக தற்போது பெரிய குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

கடந்த செப்டம்பர் மாதம் அமேசான் பகுதியில் மழைக்காட்டு பகுதிக்கு ஸ்டார்லிங்க் மூலம் இணையதள வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார் எலான் மஸ்க் . 2000 மக்கள் தொகையை கொண்ட மாருபோஸ் பழங்குடியின மக்களுக்கு இந்த இணையதள வசதி சாதாரணமாக கிடைக்க ஆரம்பித்தது.

24*7 மணி நேரம், கெட்டு போகும் பழங்குடியின மக்கள்

தற்போது இந்த வசதி ஏன் வந்தது என நொந்து கொள்கிறார்கள் அந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த மூத்த மக்கள். இங்குள்ள இளைஞர்கள் இணையதள வசதி வந்ததிலிருந்து ரொம்பவும் சோம்பேறித்தனமாக மாறிவிட்டார்களாம்.

எப்போதும் செல்போன்களுடன் தான் பொழுதை கழித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் தவறான படங்கள் பார்க்கும் பழக்கமும் இந்த இளைஞர்களிடம் அதிகரித்து விட்டதாம். வாட்ஸ் அப் குரூப் களில் ரொம்பவும் வெளிப்படையாகவே இது போன்ற படங்களை ஷேர் செய்து கொள்கிறார்களாம்.

இது போன்ற படங்களை பார்க்க ஆரம்பித்த பிறகு தங்களுடைய கணவர்கள் தங்களிடம் ரொம்பவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதாகவும் அந்த கிராமத்தில் பெண்கள் பெரியவர்களிடம் புகார் சொல்லி வருகிறார்கள்.

இணையதள வசதி வந்த பிறகு அந்தப் பகுதியில் குழந்தைகள் படிப்பதற்கு ரொம்ப வசதியாக இருப்பதாகவும் அந்த பழங்குடியின மக்கள் தெரிவித்திருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களுடைய இளைஞர்களின் எதிர்காலத்தை நினைத்தால் தான் வருத்தமாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

- Advertisement -