லாக் டவுன் நேரத்தில் அமேசானில் பார்க்க வேண்டிய 6 படங்கள்..

இந்த சமயத்தில் எந்த படம் பார்ப்பது என்று குழப்பத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு அமேசான் பிரைமில் சூப்பர் ஹிட்டான படங்களின் லிஸ்ட் தற்போது கொடுத்துள்ளோம்.

இந்த படங்கள் ரசிகர்கள் அதிக அளவில் பார்க்கப்பட்ட படங்கள் மட்டுமல்லாமல் இந்திய அளவில் விருதுகளைப் பெற்று வசூல் சாதனையும் படைத்தது.

துருவங்கள் பதினாறு: கார்த்திக் நரேன் இயக்கத்தில் சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் கலந்த படம் துருவங்கள் பதினாறு. இந்த படத்தில் ரஹ்மான், பிரகாஷ் சத்யா ராகவன் அஸ்வின்குமார் போன்ற பிரபலங்கள் நடித்து இருப்பார்கள். ரசிகர்களை திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் படங்களின் வரிசைகளில் 16ம் இடம்பெற்றுள்ளது.

தீரன் அதிகாரம் ஒன்று:

போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையை மையப்படுத்தி உண்மையான கதையை வைத்து வெளிவந்த படம் தீரன். இந்த படத்தில் கார்த்திக், ரகுல் ப்ரீத்தி சிங், அபிமன்யு சிங் போன்ற பிரபலங்கள் நடித்து இருப்பார்கள். 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப்படம் 70 கோடி வரை வசூல் வேட்டையாடியது குறிப்பிடத்தக்கது.

அருவி:

அருண் பிரபு இயக்கத்தில் அதிதி பாலன், அஞ்சலி வரதன், லட்சுமி கோபாலசுவாமி நடிப்பில் 2017 வெளிவந்த படம் அருவி. ஒரு தனி மனிதனோ, குடும்பமோ எந்த அளவிற்கு சமுதாயத்தில் பாதிக்கப்படுகிறது என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தி பல விருதுகளை தட்டிச் சென்றது. அருவி சமுதாயத்திற்கு பயந்து வாழும் நடுத்தர மக்களின் வாழ்க்கை தரத்தை மிக அற்புதமாக வெளிக்கொண்டு வந்து இருப்பார் இயக்குனர் அருண்குமார். அதிதி பாலனின் நடிப்பு இந்த படத்தில் பெரிதாக பேசப்பட்டது.

பரியேறும் பெருமாள்:

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி, யோகி பாபு நடிப்பில் வெளிவந்தது பரியேறும் பெருமாள். ஒரு கிராமத்தில் ஜாதியை வைத்து எப்படி ஒரு இளைஞன் நசுக்கப்படும் என்பதை மிக தத்ரூபமாக வெளிப்படுத்திக் கொண்டு வந்து இருப்பார். இயக்குனர் பா.ரஞ்சித் இந்த படத்தை தயாரித்து இருப்பார். கதிர் கதாபாத்திரத்திற்கு விருதுகளும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

பேரன்பு:

ராம் இயக்கத்தில் மம்முட்டி, சாதனா, அஞ்சலி அமீர் போன்ற பிரபலங்கள் நடிப்பில் 2018ல் வெளிவந்தது பேரன்பு. யுவன் சங்கர் ராஜா இசை இந்த படத்திற்கு பெரும் பக்கபலமாக இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் ஊனமுற்ற ஒரு குழந்தைக்கும் தந்தைக்கும் இருக்கும் உண்மையான பாசத்தை மையமாக இந்த கதை எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் Resurrection என்ற இங்கிலீஷ் படத்தின் ரீமேக் செய்யப்பட்ட படம் தான் பேரன்பு என்பது குறிப்பிடத்தக்கது.

அசுரன்:

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் மஞ்சுவாரியர் நடிப்பில் 2019 இல் மிக பிரம்மாண்ட வெற்றி பெற்ற படம் அசுரன் இந்த படம் வசூல் ரீதியில் மட்டுமில்லாமல் தனுஷின் நடிப்பு நடிப்பிற்கு பெரும் வரவேற்பை கொடுத்த படம் என்ற நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது மையமாக வைத்து ஒரு கீழ்தட்டு மக்கள் அவதி படுகிறார்கள் என்பதை இயக்குனர் அற்புதமாக வெளிக்கொண்டு வந்து இருப்பார் இந்த படம் விருதுகளையும் தட்டிச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்