30 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தமிழில் அமலா ரீ-என்ட்ரி! வெளியான படப்பிடிப்பு காட்சிகள்!

தமிழ் சினிமாவில் 80களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை தான் நடிகை அமலா. அந்தக் காலத்தில் இவர் ரஜினி, கமல் போன்ற சூப்பர் ஹிட் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு பல வெற்றிப்படங்களை தந்துள்ளார்.

அதன்பிறகு தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் நடிப்பதை தவிர்த்துவிட்டார். அதன்பிறகு இவர் கடந்த 1992 ஆம் ஆண்டு ஐதராபாத், புளு கிராசு இயக்கத்தை தொடங்கினார்.

இந்நிலையில் 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவிற்கு நடிகை அமலா ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். ஏனென்றால் சர்வானந்த் கதாநாயகனாகவும், ரீத்து வர்மா கதாநாயகியாகவும் நடிக்கும் ‘கணம்’ படத்தில் அமலா நடித்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது அமலா படப்பிடிப்புத் தளத்தில் இருந்தபடி எடுக்கப்பட்ட புகைப்படம் ஆனது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தற்போது வெளியாகியிருக்கும் இந்த புகைப்படத்தில் நடிகை அமலா காரில் இருந்தபடி ஸ்கிரிப்ட் படித்துக்கொண்டிருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

amala-cinemapettai
amala-cinemapettai

எனவே நீண்ட நாட்களுக்கு பிறகு அமலாவை திரையில் காண்பதற்கு தமிழ் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர். மேலும் இந்த இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து, ஸ்ரீகார்த்திக் இயக்கவுள்ள இந்த படத்தில் நாசர், சதீஷ் உள்ளிட்ட பலரும் நடிக்க உள்ளனர்.

அத்துடன் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர், டிரெய்லர் ஆகியவை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்