தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் அமலாபால்.. மீண்டும் உருவாகும் வெற்றிக்கூட்டணி

தமிழ் சினிமாவில் அறிமுகமான சில வருடங்களிலேயே முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்தவர் நடிகை அமலா பால். விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், ஜெயம் ரவி என மாஸ் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். இவருடைய நடிப்பில் கடைசியாக தமிழில் 2019ஆம் ஆண்டு ஆடை என்ற படம் வெளியானது.

இப்படத்தில் அமலாபால் நிர்வாண காட்சியில் நடித்ததால் சர்ச்சை எழுந்தது. அதன் பிறகு தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. இதனால் மற்ற மொழி படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் கவனம் செலுத்தி வந்தார். சென்றாண்டு இவருடைய குட்டி ஸ்டோரி என்ற அந்தாலஜி படம் வெளியானது.

மேலும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்த அமலாபால் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார். இந்நிலையில் தமிழில் மீண்டும் அமலா பால் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார் என்ற செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

அதாவது ஹாலிதா ஷமீம் இயக்கத்தில் உருவாக உள்ள மின்மினி படத்தில் அமலாபால் கேமியோ தோற்றத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இப்படத்தில் விஷ்ணு விஷாலும் கேமியோ தோற்றத்தில் நடிக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அமலா பால் மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் இணைந்து ராட்சசன் என்ற த்ரில்லர் படத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. மேலும் ஹாலிதா ஷமீம் இயக்கும் இப்படமும் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தின் மூலம் அமலாபாலுக்கு அடுத்தடுத்த தமிழ் பட வாய்ப்புகள் வரவும் அதிக வாய்ப்பு உள்ளது. அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் தற்போது உள்ள முன்னணி நடிகைகளில் இடத்தை அமலாபால் பிடிக்க முடியும்.

- Advertisement -spot_img

Trending News