ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ரீ-என்ட்ரியில் விருமனை ஓரம் கட்டிய அமலாபால்.. டாப் ரேட்டிங்கில் முதல் இடத்தைப் பிடித்த தரமான சம்பவம்

ஆடை படத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த அமலாபால் காடவர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தில் நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

இப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. அனூப் எஸ் பணிக்கர் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், அதுல்யா ரவி, ரித்திகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

காடவர் படத்தில் அடுத்தடுத்து சஸ்பென்ஸ் காட்சிகள் ரசிகர்களை பிரமிப்பாக வைத்திருந்தது. இந்நிலையில் காடவர் படம் வெளியான சமயத்தில் தான் கார்த்தியின் விருமன் படம் வெளியாகியிருந்தது. விருமன் படத்தின் வசூல் கோடிகளை குவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் விருமன் படத்திற்கு பிரமாண்டமாக பிரமோஷன் நடைபெற்றது. ஆனால் சைலண்டாக வந்த காடவர் படம் விருமன் படத்தை ஓரம்கட்டி உள்ளது. அதாவது சமீபத்தில் வெளியான படங்களின் ரேட்டிங்கை அமலாபால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் முதல் இடத்தில் காடவர் படமும் இரண்டாவது இடத்தில் விருமன் படமும் உள்ளது. உண்மை ஒருநாள் கண்டிப்பாக வெளியே வரும் என்பது இதன் மூலம் தெரிகிறது. விருமன் படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வந்தாலும் ஆடம்பர விளம்பரங்கள் மூலம் கலெக்ஷனை அள்ளியதாக கூறப்பட்ட வந்தது.

சூர்யாவும், கார்த்தியும் விருமன் படம் வெற்றி பெற்றதாக பெருமை பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் அந்தப் படத்தை ஓரம்கட்டி காடவர் படம் முன்னிலை வகிக்கிறது. மேலும் தியேட்டர் ரிலீசை காட்டிலும் ஓடிடியில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது காடவர் படம்.

cadaver-review-hotstar
cadaver-review-hotstar
- Advertisement -

Trending News