ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

2வது திருமணத்தை பற்றி வாயைத் திறந்த அமலாபால்.. என்ன இப்படி சொல்லிட்டீங்க

மலையாள திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை அமலாபால், முதல்முதலாக சர்ச்சைக்குரிய படமான சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதன் பிறகு மைனா, வேட்டை, தலைவா, தெய்வத்திருமகள், வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் ரசிகருடன் நல்ல வரவேற்பை பெற்றார்.

அமலா பால் தலைவா படத்தை இயக்கிய ஏஎல் விஜய் உடன் காதல் ஏற்பட்டு 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்பு கருத்து வேறுபாடு காரணமாக 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். அதன் பிறகு ஏஎல் விஜய் இரண்டாவது திருமணம் செய்துகொண்டு அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

ஆனால் தற்போது வரை அமலாபால் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார். அதனால் இவருடைய இரண்டாவது திருமணத்தை பற்றி சர்ச்சைக்குரிய செய்திகள் தொடர்ந்து வெளியாகிறது. குறிப்பாக பிரபல பாடகர் பவிந்தர் சிங் என்பவரை காதலிப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் மணக்கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படத்தை பவிந்தர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு பின்னர் உடனே நீக்கி விட்டார்.

இதனால் பலரும் அமலா பாலுக்கு இரண்டாவது திருமணம் நடந்துவிட்டது என நினைத்துக் கொண்டிருந்தபோது, அமலாபால் அதை மறுத்து விட்டார். பின்னர் அமலாபால், பவிந்தர் சிங் மீது வழக்கு தொடுத்தார். இப்படி திருமணத்தை குறித்த சர்ச்சையில் அமலாபால் தொடர்ந்து சிக்கி வருகிறார்.

இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அமலாபால் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு எக்கச்சக்கமான ரசிகர்களை தன்வசப்படுத்தி இருக்கிறார். மேலும் அந்த ரசிகர்களுடன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலந்துரையாடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

இதனால் அமலாபாலிடம் தற்போது ரசிகர் ஒருவர் அமலாபாலிடம் திருமணத்தைப் பற்றி கேட்டுள்ளார். உங்களை திருமணம் செய்துகொள்ள என்னென்ன தகுதிகள் வேண்டும என கேட்டுள்ளார். அதற்கு அமலாபால், ‘அந்த தகுதி என்னவென்று எனக்கு இன்னும் தெரியவில்லை. என்னை நானே புரிந்து கொள்ளும் பயணத்தில் தான் இருக்கிறேன்.

அதனால் என்னை திருமணம் செய்து கொள்ள என்னென்ன தகுதி வேண்டும் என்பதை தெரிந்தவுடன் உங்களுக்கு சொல்கிறேன்’ என கூறியுள்ளார். என்ன அமலாபால் இப்படி ஒரு பதிலை சொல்லிட்டாங்க என ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர்.

- Advertisement -

Trending News