அடுத்த காதலனை லிப் லாக் செய்து ஓகே சொன்ன அமலா பால்.. எல்லை மீறி ரொமான்ஸ் செய்யும் புகைப்படம்

Actress Amala Paul Love: தென்னிந்திய சினிமாவில் சர்ச்சை நாயகிகளுள் ஒருவர்தான் நடிகை அமலா பால். 2010 ஆம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோயின் ஆக அறிமுகமானார். மைனா படம் ரிலீஸ் ஆன பிறகு அமலா பாலுக்கு தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பு இருந்தது . ஆனால் வாங்கிய அத்தனை பேரும் புகழையும் அவரே கெடுத்துக் கொண்டார்.

விஜய்யின் தலைவா படத்தில் நடித்து கொண்டிருக்கும்போது இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு வருட வாழ்க்கையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து ஆகியது. அதன் பின்னர் ஒரு சில ஹிட் படங்களை கொடுத்த அமலா பாலுக்கு சினிமாவில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை.

இப்படியான ஒரு சூழ்நிலையில் அமலா பால் இன்று தன்னுடைய அடுத்த காதலனை சமூக வலைத்தளம் மூலம் அறிமுகப்படுத்தி இருக்கிறார். அமலா இன்று தன்னுடைய 32 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதற்காக வைக்கப்பட்ட பார்ட்டி ஒன்றில் அவருடைய நீண்ட நாள் நண்பர் ஜெகத் தேசாய் அமலா பாலுக்கு ப்ரொபோஸ் செய்து இருக்கிறார்.

அமலா பால் மற்றும் அவருடைய புதிய காதலர் ஜெகத் தேசாய்

Amala Love
Amala Love

அமலா பால் அந்த காதலை ஏற்றுக் கொள்ளும் விதமாக ஜெகத் தேசாய்க்கு உதட்டில் முத்தம் கொடுத்து இருக்கிறார். இந்த வீடியோவை ஜெகத் தேசாய் அமலாபாலை டேக் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். வெட்டிங் பெல்ஸ் என கேப்ஷன் செய்திருப்பதால் விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்யப் போகிறார்கள் என சொல்லப்படுகிறது.

அமலா பால் கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த பாடகர் பாவ்னிந்தர் சிங்கை காதலிப்பதாக அறிவித்திருந்தார். அவர்கள் இருவரும் லிவிங் டு கெதர்ரில் வாழ்ந்து வந்தனர். சில பிரச்சனைகளால் இருவரும் பிரிந்த நிலையில் பாவ்னிந்தர் சிங் திருமண உடையில் அமலா பாலுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில கசப்பான அனுபவங்களுக்கு பிறகு அமலா மீண்டும் தன்னுடைய புதிய வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார். இந்த வாழ்க்கை அவருக்கு நீடிக்க வேண்டும் என பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். விரைவில் அமலா பால், ஜெகத் தேசாய் ஜோடி திருமண தேதியை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்