சினிமாவில் எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும் ஒரு காலகட்டத்திற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் குறைந்து விடும். இதனால் மார்க்கெட் இழந்த நடிகைகள் அக்கா, அம்மா, அண்ணி போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
சில நடிகைகள் சின்னத்திரை பக்கம் தங்கள் கவனத்தை திருப்பி விடுவார்கள். அப்படி ஒரு நிலைக்கு தான் நடிகை அமலாபால் தள்ளப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் தனுஷ், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ள அமலாபால் சமீப காலமாக இருக்கும் இடமே தெரியாமல் இருக்கிறார்.
திருமணம், விவாகரத்து என்று பரபரப்பை கிளப்பிய அவர் ஆடை படத்தில் நடித்த பிறகு ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்தார். அது மட்டுமல்லாமல் சோசியல் மீடியாவில் அளவுக்கு அதிகமான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு சில விமர்சனங்களையும் சந்தித்தார்.
இப்படி அவரைப் பற்றி ஏதாவது ஒரு செய்தி ஊடகங்களில் வந்து கொண்டே இருக்கும். ஆனால் சமீப காலமாக அவரைப்பற்றி எந்த செய்திகளும் வெளிவருவது கிடையாது. இதனால் ரசிகர்கள் இப்படி ஒரு நடிகை இருந்ததையே மறந்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்நிலையில் பிரபல சேனலான விஜய் டிவி அமலாபாலை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுத்துள்ளது. மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்ற அந்த நிகழ்ச்சியில் மார்கெட் இல்லாத பல செலிபிரிட்டிகள் கலந்து கொள்வார்கள்.
இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசன் விரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இதற்காகத்தான் அமலா பாலை விஜய் டிவி அணுகி இருக்கிறது. தற்போது இந்த அழைப்பை அவரும் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வரலாம் என்று நினைத்த அமலா பால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தயாராக இருக்கிறாராம்.
அதன் முன்னோட்டமாக தான் அவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜு வீட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டாராம். விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் இந்த எபிசோடுக்கு ரசிகர்களின் ஆதரவு எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து அமலபால் தன்னுடைய முடிவை உறுதியாக சொல்ல இருக்கிறாராம்.
அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றுவரை புகழப்படும் ஒரே நடிகை ஓவியா தான். தற்போது இவருக்கு போட்டியாக கேரளாவில் இருந்து வரும் அமலா பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.