ஒரே நடிகருக்கு ஜோடி போடும் கீர்த்தி ஷெட்டி, பூஜா ஹெக்டே.. இந்த மனுஷன் கொடுத்து வச்சவரு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் சமீபகாலமா நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது நடிகர் விஜயுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பல படங்களில் நடிப்பார் என கூறிவருகின்றனர். இப்படம் விஜய் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதால் படத்தினை தீபாவளி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது அதனால் தற்போது படக்குழு அனைத்து காட்சிகளையும் திட்டமிட்டபடி எடுத்து வருகின்றனர்.

தெலுங்கு சினிமாவில் ஒப்பனா படத்தின் மூலம் பிரபலமான நடிகையாக இருப்பவர் கீர்த்தி ஷெட்டி. இவரது நடிப்பில் வெளியான முதல் படமே ரசிகர்களை பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. கீர்த்தி ஷெட்டி அப்பாவாக நடித்த விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது.

allu-arjun-cinemapettai
allu-arjun-cinemapettai

அதனால் விஜய் சேதுபதியின் சினிமா மார்க்கெட்டும் உயர்ந்தது. பிரபலமாக இருக்கும் நடிகைகள் தற்போது அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகின்றனர் அப்படி முன்னணி நடிகையாக இருக்கும்பூஜா ஹெக்டே மற்றும் கீர்த்தி ஷெட்டி இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அல்லு அர்ஜுன் ஸ்ரீராம் வேணு இயக்கத்தில் ஐகான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் கீர்த்தி ஷெட்டி இருவரும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்முறையாக அல்லு அர்ஜுனுடன் கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்