42வது பிறந்த நாளில் சம்பவம் செய்ய போகும் அல்லு அர்ஜுன்.. த்ரிஷாவை வைத்து போடும் அஸ்திவாரம்

Allu Arjun: தெலுங்கு ஸ்டார் அல்லு அர்ஜுன் அக்கட தேசத்தில் மட்டுமல்ல இந்திய அளவில் உள்ள ரசிகர்களையும் கவர்ந்து விட்டார்.

அதற்கு காரணம் 2021 ஆம் ஆண்டு புஷ்பா முதல் பாகம் மூலம் நடிப்பை தாறுமாறாக தெறிக்க விட்டது தான்.

இதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பின் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் பான் இந்தியா மூவியாக உருவாகி இருக்கிறது.

அந்த வகையில் இப்படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதனால் அல்லு அர்ஜுனாவின் 42 வது பிறந்தநாளான ஏப்ரல் 8ம் தேதி ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக புஷ்பா 2 படத்தின் டீசர் வெளியாக போகிறது.

முதல் பாகம் எதிர்பார்க்காத அளவிற்கு 370 கோடி வரை வசூலை பெற்று வசூல் நாயகனாக ஜொலித்தார்.

தற்போது இதை இன்னும் அதிகரிக்கும் விதமாக புஷ்பா 2 படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள். மேலும் இப்படம் அனைத்து திரையரங்குகளிலும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீசாக போகிறது.

திரிஷாவுடன் ஆடப்போகும் அல்லு அர்ஜுன்

அத்துடன் அல்லு அர்ஜுனா அவருடைய பிறந்தநாளுக்கு இன்னொரு சம்பவத்தை தரமாக செய்ய வேண்டும் என்பதற்கு மும்மரமாக வேலை பார்த்து வருகிறார்.

அதாவது கோலிவுட் மட்டும் பாலிவுட்டில் இயக்குனராக கால் வைத்து வசூல் அளவில் வெற்றி இயக்குனராக ஜொலித்து வரும் அட்லீயுடன் அல்லு அர்ஜுனா கூட்டணி வைக்கப் போகிறார்.

சமீபத்தில் ஷாருக்கானை வைத்து 1100 கோடி வசூலை கொடுத்தார். அதே மாதிரி அல்லு அர்ஜுனாவையும் வைத்து சுமார் 1000கோடி வசூலை அடைய வேண்டும் என்பதில் இருவரும் சேர்ந்து அஸ்திவாரம் போட போகிறார்கள்.

அதற்கு பிள்ளையார் சுழி போடும் விதமாக அல்லு அர்ஜுனாவின் பிறந்தநாள் அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடப் போகிறார்கள்.

மேலும் எப்படி நயன்தாராவை பாலிவுட்டுக்கு பயன்படுத்தினாரோ, அதே மாதிரி அட்லி, அல்லு அர்ஜுனாவுக்கு ஜோடியாக திரிஷாவை வைத்து வசூலை குவிக்கப் போகிறார்.

இவர்கள் கூட்டணி எந்த அளவிற்கு வெற்றிக் கொடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Sharing Is Caring:

Leave a Comment

சமீபத்திய சினிமா செய்திகள்