பாகுபலி வசூலை ஓரம்கட்ட இதுதான் ஒரே வழி.. மாஸ்டர் ப்ளான் போட்ட அல்லு அர்ஜுன்

தெலுங்கு நடிகர்கள் அனைவருமே தற்போது தங்களுடைய படங்களை அனைத்து மொழிகளிலும் தயார் செய்து வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கெல்லாம் அச்சாரம் போட்டது என்னமோ பாகுபலி படம்தான்.

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் உலகம் முழுவதும் 1,500 கோடிகளுக்கு மேல் வசூல் சாதனை செய்து அனைவரையும் அதிர வைத்தது. அந்த படத்தில் நடித்த பிரபாஸ், அதன்பிறகு அனைத்து படங்களையும் அனைத்து மொழிகளிலும் தயாரித்து நடித்து வருகிறார்.

அதேபோல் அடுத்ததாக அனைத்து மொழி ரசிகர்களை கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டவராக கருதப்படுபவர்தான் அல்லு அர்ஜுன். தமிழ் மற்றும் மலையாள சினிமாவிலும் அவருக்கு நல்ல வரவேற்புள்ளது.

அதை பயன்படுத்திய தற்போது இந்தியா முழுவதும் வசூல் நாயகனாக வலம் வர முடிவு செய்துள்ளாராம். அந்த வகையில் தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படம் உருவாகி வருகிறது.

முதலில் ஒரு பாகமாக தயாராக இருந்த புஷ்பா திரைப்படம் தற்போது இரண்டு பாகங்களாக உருவாகயிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். படத்தின் கதையை சுருக்க முடியாததால் இரண்டு படமாக எடுக்க முடிவு செய்துள்ளனர்.

இதனால் பாகுபலி படங்களுக்கு இணையாக அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா திரைப்படம் வசூல் ஈட்டும் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது படக்குழு. புஷ்பா படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

alluarjun-pushpa
alluarjun-pushpa
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்