தலைவா 2 எப்போது வரும்?.. ரசிகர்களின் கேள்விக்கு ஏஎல் விஜய்யின் பதில்

விஜய் நடிப்பில் ஏஎல் விஜய் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தலைவா. அமலாபால், சத்யராஜ், சந்தானம் மற்றும் பலர் இப்படத்தில் நடித்து இருந்தனர். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். தலைவா படம் 2012-இல் ரிலீஸாவதாக இருந்தது.

சில அரசியல் காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. ஆரம்பத்தில் தலைவா என்ற தலைப்புடன் டைம் டு லீட் என்ற ஆங்கில வார்த்தையில் இருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டலும் விடுக்கப்பட்டிருந்தது.

அதன்பின்பு இப்படம் தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களில் முன்பே வெளியாகி இருந்தது. இதனால் இங்குள்ள ரசிகர்கள் வேறு மாநிலத்திற்கு சென்ற தலைவா படத்தை பார்த்தனர். பல சிக்கலுக்கு பிறகு இப்படம் வெளியானதால் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

ஆனாலும் தலைவா படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் மறக்கமுடியாத படமாக அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று தலைவா படம் வெளியாகி ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இப்படத்தின் ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்தது. அதாவது தலைவா டே என விஜய் ரசிகர்கள் கொண்டாடினர்.

இந்நிலையில் மீண்டும் விஜயோடு எப்போது இணைவார்கள் என்ற கேள்வி ஏஎல் விஜயிடம் கேட்கப்பட்டது. அப்போது வேறொரு ஸ்கிரிப்டுக்கு என்னை எப்போது அழைக்க வேண்டும் என்பது விஜய் சாருக்கு தெரியும். தற்போது என்னிடம் ஒரு ஸ்கிரிப்ட் தயாராக உள்ளது. எதிர்காலத்தில் இந்த விஷயங்கள் நடக்கும் என நம்புகிறேன்.

அதுமட்டுமல்லாமல் நான் எங்கு சென்றாலும் தலைவா 2 எப்போது என்ற கேள்வி தான் வைக்கப்படுகிறது என்று இயக்குனர் விஜய் கூறியுள்ளார். இதனால் தற்போது விஜய் வைத்துள்ளது ஸ்கிரிப்ட் தலைவா 2 படத்திற்கானதாக இருக்கக்கூடும் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

- Advertisement -