உலகப் புகழ் ஜெய் பாலைய்யா மிரட்டியுள்ள அகண்டா.. அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலகிருஷ்ணா . இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. அந்த அளவிற்கு தனக்கான ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்.

பாலகிருஷ்ணா படங்கள் அனைத்துமே சண்டை காட்சியில் ஆக்ரோசமாக வைக்கப்பட்டிருக்கும். அதற்குக் காரணம் தெலுங்கு ரசிகர்கள் அனைவருமே இந்த மாதிரி காட்சிகள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். அதற்காகவே ஒவ்வொரு சண்டைக்காட்சிகளும் யாரும் நம்ப முடியாத அளவிற்கு வித்தியாசமாக வைக்கப்பட்டிருக்கும்.தமிழ் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம்.

akhanda-balakrishna-twitter-review
akhanda-balakrishna-twitter-review

பாலகிருஷ்ணா கிட்டத்தட்ட தெலுங்கில் சூப்பர் ஸ்டார் என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு இவருக்கு ஏராளமான ரசிகர் கூட்டம் உள்ளது. இவர் படம் வெளியானால் போதும் அன்று அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். அப்படி தான் தற்போது பாலகிருஷ்ணன் நடிப்பில் அகண்ட படம் உருவாகியுள்ளது.

akhanda-balakrishna-twitter-review
akhanda-balakrishna-twitter-review

இப்படத்தில் பாலகிருஷ்ணா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மேலும் சிவனைப் போற்றும் பக்தனாகவும் நடித்துள்ளார். தமனின் இசையில் வெளியான பாடல்கள் மற்றும் சண்டைக் காட்சிகளுக்காக போடப்பட்ட தீம் இசை படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. அந்த அளவிற்கு தமனின் இசை படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.

akhanda-balakrishna-twitter-review
akhanda-balakrishna-twitter-review

சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் முன்பெல்லாம் ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகள் இடம்பெற்று இருக்காது ஆனால் சமீபகாலமாக பெருவாரியான படங்களில் ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகள் அதிகம் இடம் பெற்றன. உதாரணத்திற்கு அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்தின் சண்டைக்காட்சிகளும் அப்படித்தான் இருந்தது. அதாவது ரஜினிகாந்த் நடந்து சென்றபோது லாரிகள் வெடிப்பது எட்டி உதைக்கும் போது பறந்து செல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

akhanda-balakrishna-twitter-review
akhanda-balakrishna-twitter-review

தற்போது இதே போல் தான் பாலகிருஷ்ணன் நடித்துள்ள அகண்ட படத்திலும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாலகிருஷ்ணா ஏற்கனவே நடித்துள்ள படத்தின் கதையைப் போல தான் இப்படத்தின் கதையும் அமைந்துள்ளது. ஆனால் படத்தின் காட்சிகள் வித்தியாசமாக உள்ளதால் படம் தற்போது ரசிகர்களின் ஆதரவால் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்