ஏற்கனவே ஒர்க் அவுட் ஆகாத கெமிஸ்ட்ரி.. புது மருமகளுக்கு ரூட் போடும் ஏகே 62 படக்குழு

துணிவு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, நடிகர் அஜித்குமார் தன்னுடைய 62 ஆவது படத்திற்காக லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்திருக்கிறார். முதலில் இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகும் போது, கண்டிப்பாக இந்த படத்தில் நடிகை நயன்தாரா தான் அஜித்துடன் ஜோடி சேர போகிறார் என தகவல்கள் வெளியானது.

அதன் பின்னர் இந்த படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலக்கப்பட்டதோடு, படத்தின் ஹீரோயின் லிஸ்டில் இருந்து நயன்தாராவும் ரிஜெக்ட் செய்யப்பட்டார். அதன் பின்னர் ஏகே 62 படத்தில் யார் ஹீரோயினாக நடிக்க போவது என மிகப்பெரிய பஞ்சாயத்து போய் கொண்டிருந்தது. நடிகைகள் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் என அடுத்தடுத்து லிஸ்ட் நீண்டு கொண்டே போனது.

Also Read: 26 வருடங்களில் அஜித்தை தூக்கி விட்ட யுவனின் ஏழு படங்கள்.. அனிருத்துக்கு இப்பவும் டஃப் கொடுக்கும் மங்காத்தா

இந்நிலையில் இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் தயாரிப்பாளர்கள் அடங்கிய குழு படத்தில் யாரை ஹீரோயினாக நடிக்க வைக்கலாம் என பயங்கரமாக டிஸ்கஷன் செய்திருக்கின்றனர். தற்போது நடிகர் அஜித்திடம் பிரபல நடிகை ஒருவரை சிபாரிசு செய்திருக்கின்றனர். இந்த நடிகை ஏற்கனவே அஜித்துடன் ஜோடி சேர்ந்தவர் தான்.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து 2017 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் விவேகம். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த காஜல் அகர்வாலை தான் ஏகே 62 வில் ஹீரோயினாக நடிக்க வைக்க  படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. காஜல் அகர்வாலுக்கு சமீபத்தில் தான் திருமணம் ஆகி ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது.

Also Read: ஐம்பதை தாண்டியும் இந்திய அளவில் சாதனை படைக்கும் விஜய், அஜித்.. முதல் முறையாக ஒன்றாக கொண்டாடும் ஃபேன்ஸ்

தற்போது நடிகை காஜல் அகர்வால், லைக்கா தயாரிப்பில் உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனால் தான் லைக்கா தற்போது ஏகே 62 வில் காஜல் அகர்வாலை நடிக்க வைக்க சிபாரிசு செய்திருக்கிறது. ஆனால் அஜித்-காஜல் அகர்வால் ஜோடி எந்த அளவிற்கு செட் ஆகும் என்று தெரியவில்லை.

இதற்கு காரணம் ஏற்கனவே விவேகம் திரைப்படத்தில் இவர்கள் இவருடைய கெமிஸ்ட்ரி கொஞ்சம் கூட செட் ஆகவில்லை. சீரியஸான காட்சிகளில் இவர்களின் செண்டிமெண்ட் காட்சிகள் படத்தின் பின்னடைவுக்கு காரணாமாக அமைந்தது. காஜல் அகர்வாலின் காட்சிகளால் படத்தின் கிளைமேக்ஸ் இன்றுவரை ட்ரோல் செய்யப்படுகிறது.

Also Read: 26 வருடங்களில் அஜித்தை தூக்கி விட்ட யுவனின் ஏழு படங்கள்.. அனிருத்துக்கு இப்பவும் டஃப் கொடுக்கும் மங்காத்தா

- Advertisement -