வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

AK 61 டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி அறிவிப்பு.. பெரிய திட்டம் தீட்டிய போனிகபூர்

கிட்டத்தட்ட 3 வருடங்களாக தல அஜித் நடிப்பில் எந்த படமும் வெளியாகாமல் இருந்த நிலையில், அதன்பிறகு வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றாலும், சில விமர்சனங்களும் இருந்தது.

இந்நிலையில் இந்த படத்திற்கு பிறகு வினோத்-அஜித் குமார் கூட்டணியில் உருவாகிக்கொண்டிருக்கும் AK 61 படத்தை போனி கபூர் தயாரித்துக் கொண்டிருக்கிறார். இந்தப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.

AK61 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார். விரைவில் திரையிடுவதற்காக படப்பிடிப்பு பணிகள் வேக வேகமாக நடந்து வரும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு இந்த மாதம் நடைபெற உள்ளது. AK 61 படத்தில் தல அஜித் கதாநாயகனாகவும், வில்லனாகவும் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

AK61 படத்தில் நடிக்கும் அவரின் தோற்றம் ஒன்று சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் இந்தப் படத்தை குறித்த அதிக எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நிலையில், அஜித் படத்தின் கிளைமாக்ஸுருக்கு வித்தியாசமான தோற்றத்தில் நடிக்க வேண்டும் என்பதால், அதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.

இதனால் இந்த இடைவெளியில் தல அஜித் ஐரோப்பாவில் பைக் ரைட் செய்துகொண்டிருக்கிறார். அந்த பயணத்தை முடித்த பிறகு AK 61 படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் இணைவார். இன்னிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

ஆகையால் AK 61 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் மறைந்த தன்னுடைய காதல் மனைவி நடிகை ஸ்ரீதேவியின் பிறந்த நாளான ஆகஸ்ட் 13-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கிறாராம். இந்த படத்தின் மூலம் பெண் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களின் மனதில் இடம் கிடைத்த நடிகை ஸ்ரீதேவியை ரசிகர்களுக்கு நினைவுபடுத்த போனி கபூர் அவருடைய பிறந்தநாளில் AK  61 படத்தின் டைட்டிலை வெளியிட இருக்கிறார்.

- Advertisement -

Trending News