ஏகே 62 டைட்டில் வெளியானது.. மீண்டும் வி சென்டிமென்டில் சிக்கிய அஜித்

அஜித்தின் துணிவு படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அவரது அடுத்த படமான ஏகே 62 மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்கள். முதலில் லைக்கா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இந்த படத்தை இயக்குவதாக இருந்த நிலையில் அவரது கதை தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடிக்காததால் ஏகே 62 வில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டார்.

இதைத்தொடர்ந்து அருண் விஜய்யின் ஆஸ்தான இயக்குனர் மகிழ்திருமேனி ஏகே 62 படத்தை இயக்க உள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் அதற்கான அறிவிப்பை வெளியிடாமல் படக்குழு இழுத்தடித்து வந்தது. ஆனால் ஒரு வழியாக அஜித்தின் பிறந்தநாள் அன்று அறிவிப்பு வெளியாகும் என நம்பக தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வெளியானது.

Also Read : லியோவை ஓரம் கட்ட வரும் ஏகே 62.. அஜித் கொடுக்க போகும் பிறந்தநாள் சர்ப்ரைஸ்

அதன்படி மே ஒன்று அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு லைக்கா நிறுவனம் ஏகே 62 வின் அப்டேட்டை வெளியிட்டு உள்ளது. அதுவும் இரவு 12 மணிக்கு இந்த அப்டேட்டை கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி அஜித்தின் நிறைய படங்கள் வி செண்டிமெண்டில் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி விவேகம், விசுவாசம், வலிமை ஆகிய லிஸ்டில் ஏகே 62 படமும் இணைந்துள்ளது.

அதாவது ஏகே 62 படத்திற்கு விடாமுயற்சி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. உழைப்பாளர்கள் தினமான இன்று விடாமுயற்சி என்று டைட்டிலை வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் தனது திரை வாழ்க்கையில் அஜித் விடாமுயற்சியால் வெற்றி கண்டவர். அதேபோல் இந்த படமும் 100% வெற்றி என்று ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள்.

Also Read : நண்பர் தயாரிப்பில் அஜித் வெற்றி கண்ட 9 படங்கள்.. மூன்று கெட்டப்பில் படைத்த வரலாறு

மேலும் விடாமுயற்சி படம் லைக்கா சுபாஷ்கரன் தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாக இருக்கிறது. ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா பணியாற்ற இருக்கிறார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும் என படக்குழு தரப்பிலிருந்து கூறப்படுகிறது.

அஜித்தின் ஏகே 62 பட டைட்டில்

ak 62- title

Also Read : இப்ப வரை இந்த டாப் ஹீரோவுடன் ஜோடி சேராத 5 நடிகைகள்.. விஜய் ஓகே அஜித்துடன் நடிக்க மாட்டேன்

- Advertisement -