வலிமை வெளிவராமலேயே அடுத்த பட ரிலீஸுக்கு நாள் குறித்த படக்குழு.. AK61 அசத்தலான அப்டேட்

கொரோனா தொற்று யார் வாழ்க்கையில் விளையாடியதோ இல்லையோ அஜித் ரசிகர்கள் வாழ்க்கையில் சிறப்பாக விளையாடி விட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அஜித்தை பெரிய திரையில் பார்க்க போகிறோம் என்ற மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள் இருந்த நிலையில், திடீரென உச்சம் தொட்ட கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டது.

இதனால் இந்த பொங்கலுக்கு வெளியாக வேண்டிய வலிமை படத்தின் வெளியீட்டை படக்குழுவினர் தள்ளி வைத்து விட்டனர். படத்தின் வெளியீடு தள்ளி சென்றதால் அஜித் ரசிகர்கள் சோகத்தின் விளிம்பிற்கே சென்றுவிட்டனர். அடுத்து படம் எப்போது வெளியாகும் என தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் வலிமை மற்றும் அதனை தொடர்ந்து அஜித் நடிக்க உள்ள ஏகே 61 படத்தின் வெளியீட்டை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி வலிமை படம் வரும் மார்ச் மாதமும், ஏகே 61 படம் இந்த ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அஜித் ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

நேர்க்கொண்ட பார்வை மற்றும் வலிமை படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள படம் தான் ஏகே 61. இந்த படத்தையும் முந்தைய படங்களை தயாரித்த போனி கபூரே தயாரிக்க உள்ளார். ஏற்கனவே பொங்கலுக்கு பின்னர் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், அஜித் 61 படத்திற்காக ஹைதராபாத்தில் செட் அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கி உள்ளதாம். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி வலிமை படம் மார்ச் மாதம் வெளியாக உள்ளதால் அப்படம் வெளியான பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எது எப்படியோ ஒரே சமயத்தில் அஜித்தின் இரண்டு படங்களின் வெளியீட்டை அறிவித்துள்ளதால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இந்த முறையாவது படம் திட்டமிட்டபடி வெளியாக வேண்டும் என கடவுளிடம் வேண்டி வருகிறார்களாம்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை