லைக்காவுக்கு தலைவலியாய் மாறிய விடாக் கண்டன்.. நடுக்கடலில் தத்தளிக்கும் அஜித்தின் விடாமுயற்சி

Ajith-Vidaamuyarchi: ரேஸ்ல பின்னாடி வந்தவங்க கூட முன்னாடி போயிட்டாங்க விடாமுயற்சிக்கு என்னதான் பதில் என அஜித் ரசிகர்கள் நொந்து போய் இருக்கின்றனர். கடந்த வருடம் இப்பட அறிவிப்பு வெளிவந்து பல மாதங்களுக்கு பிறகு தான் ஷூட்டிங் தொடங்கியது.

ஆனால் அதையும் விரைவாக எடுத்து முடிக்காமல் கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கிறது விடாமுயற்சி. தற்போது வெளிநாட்டு படப்பிடிப்பை முடித்து விட்ட பட குழு சென்னையில் செட் போட்டு வேலைகளை ஆரம்பிப்பார்கள் என்ற தகவல் கசிந்தது.

ஆனால் இப்போது புது பஞ்சாயத்து ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறதாம். அதாவது லைக்கா லால் சலாம் படத்தால் பெருத்த அடி வாங்கி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் விடாமுயற்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பட்ஜெட்டை மீறி செலவு செய்துவிட்டார்கள்.

Also read: அஜித்துக்காக எழுதப்பட்ட 5 கதைகள்.. முதல் கோணல் முற்றிலும் கோணலாய் முடிந்த பாலாவின் நட்பு

இதுக்கு மேலயும் பாடி தாங்காது என லைக்கா கண்டிஷன் போட்டதால்தான் பட குழு வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்ததாக ஒரு பேச்சு உலா வருகிறது. மேலும் அஜர்பைஜானில் எடுக்க வேண்டிய காட்சிகளை எல்லாம் இங்கேயே செட் போட்டு எடுத்து விடுங்கள் என தயாரிப்பு தரப்பில் இருந்து கூறப்பட்டிருக்கிறது.

ஆனால் ரியாலிட்டியாக இருக்காது என விடாக் கண்டன ஆக இயக்குனர் மீண்டும் வெளிநாட்டுக்கு பறந்தே தீருவேன் என பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறாராம். ஆனால் ஒத்த பைசா தரமாட்டேன் என கொடாக்கண்டனாக தயாரிப்பு தரப்பும் முறுக்கி கொண்டிருக்கிறார்கள்.

இந்த பஞ்சாயத்தை பார்த்த த்ரிஷா சத்தமில்லாமல் மற்ற பட வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். அதேபோல் அஜித்தும் பெரிய அளவில் இதில் ஆர்வம் காட்டவில்லையாம். இப்படி லைக்காவுக்கு தலைவலியாய் மாறிப் போய் இருக்கும் விடாமுயற்சி பேச்சுவார்த்தை சமூகமானால் தான் அடுத்த கட்ட படப்பிடிப்பே ஆரம்பிக்கும் என்ற நிலையில் இருக்கிறது.

Also read: அஜித் இதுக்கு தான் விக்னேஷ் சிவனை நிராகரித்தாரா.? கணவனுக்காக வரிந்து கட்டிய நயன்தாரா

Sharing Is Caring:

அதிகம் படித்தவை