குடும்பத்தை விட்டு ஊர் ஊராய் சுற்றும் அஜித்தின் புகைப்படங்கள்.. CSK மேட்ச் பார்க்க வந்த ஷாலினி

Ajith’s tour photos and Shalini came to watch the CSK match: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்திற்கு கைவசம் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு மெகா பட்ஜெட் படங்கள் உள்ளது. 

என்றுமே உடல்நிலை பற்றி கவலை கொள்ளாது தன்னம்பிக்கையுடன் வெறிகொண்டு உழைக்கும் அஜித், தற்போது படங்களுக்கு சற்று ஓய்வு கொடுத்து தானும் ஓய்வு எடுக்கும் நோக்கில் ஊர் சுற்றி வருகிறார்.

விடுமுறை நாட்களில் அதிக நேரம் குடும்பத்துடன் தனது ஓய்வு நேரத்தை செலவிடும் அஜித், இந்த முறை சற்று மாறுதலாக மத்திய பிரதேச காட்டுப் பகுதியில் தனது நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார். 

Ajith

விளையாடுவது பைக் ரைடு செய்வது, சமைப்பது என நேரத்தை செலவிட்டு வருகிறார்.

Ajith with Kanada Actress Saanya

அதுமட்டுமின்றி சமீபத்தில் அஜித் கன்னட நடிகை சான்யா ஐயர் மற்றும்  அவரது சகாக்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சான்யா ஐயர் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு இந்த ஜென்டில்மேன் பற்றி புகழ் பாடி உள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி அஜித் தனது 25 வது படமான அமர்க்களத்தில் நடித்த  சக நடிகையான ஷாலினியை காதலித்து கரம் பிடித்தார்.

அஜித்தும் ஷாலினியும் காதலிக்க ஆரம்பித்து 25 ஆண்டுகள் கடந்த நிலையில் சமீபத்தில் இந்நிகழ்வை கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். 

ஐபிஎல் மேட்ச் காண வந்த ஷாலினி மற்றும் அஜித்தின் மகன் ஆத்விக்

சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் சீசன் 17 மார்ச் 23 இன்று தொடங்கியுள்ளது.  நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் அணி ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோத உள்ளதை அடுத்து திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

அஜித்தின் ஃபேமிலியில் இருந்து ஷாலினி, ஷாமிலி, ரிச்சர்ட் மற்றும் அஜித்தின் மகன் ஆத்விக் முதலானோர் சென்னை அணி பங்கு கொள்ளும் ஐபிஎல் போட்டியை நேரில் கண்டு ரசித்து வருகின்றனர். 

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்